Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்.. எந்தெந்த வங்கிகளில் என்ன சலுகை.. எப்படி கணக்கினை தொடங்குவது..விவரம் என்ன?


பலருக்கும் வரப்பிரசாதம்

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் பலர் குறைந்தபட்ச இருப்பு தொகையினை நிர்வகிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும் போல. ஏனெனில் சில வங்கிகளில் அவ்வளவு உள்ளது.
அந்த குறைந்தபட்ச தொகையினை வைத்திருக்காத பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இது கடைசியில் பல குழப்பங்களைத் தான் உருவாக்கும்.
ஏனெனில் சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 10,000 ரூபாய் வரை வைத்திருக்க கூறுகின்றன. சில நேரங்களில் நம்மால் அதனை வைத்திருக்க முடியாத நிலை வரும். அங்கு அவர்கள் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பலருக்கும் வரப்பிரசாதம்
ஆனால் அப்படியானவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை என்று எதனையும் பராமரிக்க தேவையில்லை. மேலும் வழக்கமான சேமிப்பு கணக்குடன் ஒப்பிடும்போது, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டும் கிட்டதட்ட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆக அப்படி வழங்கி வரும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதன் மூலம் என்னென்ன சேவைகளை பெற முடியும், என்னென்ன சலுகைகள் என பார்க்கவிருக்கிறோம்.
 ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்.. எந்தெந்த வங்கிகளில் என்ன சலுகை.. எப்படி கணக்கினை  தொடங்குவது..விவரம் என்ன? | Many banks offer zero balance account in india,  some banks are ...
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் பிரதம் சேமிப்பு கணக்கு
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் பிரதம் சேமிப்பு கணக்கு எந்த மைக்ரோ அக்கவுண்டிலும் வரம்பற்ற பரிவர்த்தனைக்கு உதவுகிறது.
சாதாரண சேமிப்பு கணக்கில் உள்ளது போல இதிலும் நீங்கள் மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கியினை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு அருகில் உள்ள கிளையில், சரியான ஆவணங்களை கொடுத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
தற்போது இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு 6.0% முதல் 7.00% வட்டி வழங்கப்படுகிறது. (பேலன்ஸ் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை)
இந்த கணக்கின் மூலம் ஆன்லைன் பில் பேமெண்டுகளையும் செலுத்திக் கொள்ளலாம்.
 YES BANK – நடந்தது என்ன?… ராணா கபூர் கைது | E Tamil News
யெஸ் வங்கி
யெஸ் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் மூலம் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக யெஸ் பேங்க் - யெஸ் பேங்க் ஏடிஎம்மில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதே மற்ற வங்கி ஏடிஎம்களில் 5 இலவச பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
உங்களது மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங்கில் அன்லிமிடெட் நெஃப்ட் மற்றும் RTGS சேவையினை செய்து கொள்ள முடியும்.
பலவிதமான சலுகைகளுடன் டைட்டானியம் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது.
இதோடு, இந்த சேமிப்பு கணக்கிற்கு வட்டியாக 4 - 6% வரை வழங்கப்படுகிறது. (பேலன்ஸ் ரூ.1 லட்சம் - ரூ.300 கோடி வரை)
 லாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..!  | IndusInd Bank posts 23% rise in net profit at Rs 1,035.7 crore - Tamil  Goodreturns
இந்தஸ்இந்த் பேங்க்- இந்தஸ் ஆன்லைன் சேமிப்பு கணக்கு
இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் அன்லிமிடெட் ஏடிஎம் பரிவர்த்தனை மற்றும் இலவச இணைய வங்கி, மொபைல் வங்கி சேவைகளை அளிக்கிறது.
நீங்கள் இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை ஆன்லைனில் பான் எண் மற்றும் ஆதார் எண், உள்ளிட்ட பல விவரங்களை கொடுத்து உடனடியாக கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.
ஆன்லைன் வங்கி மூலம் நெஃப்ட், RTGS, IMPS பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இந்த சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 4 - 6% (ரூ.1 லட்சம் முதல் 10 லட்சத்திற்கும் அல்லது அதற்கும் மேல்)
 What is a DBS DigiSavings account and its benefits? - Quora
டிபிஎஸ் – டிஜி சேவிங்க்ஸ் (DBS - Digisavings)
ஆதாரினை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை தொடங்க முடியும்.
விசா பேமென்ட் மூலம் கேஸ்லெஸ், காண்டாக்ட்லெஸ், பின்லெஸ் பேமென்டுகளை செய்துக் கொள்ள முடியும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% கேஸ் பேக் ஆஃபர்களும் உண்டு.
யுபிஐ, RTGS, NEFT, IMPS உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி 24 மணி நேரமும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
சேமிப்பு கணக்குகளுக்கு 5% வட்டி விகிதத்தினையும் பெற்றுக் கொள்ளலாம்.
 Kotak 811 Zero Balance Savings Account Details & Benefits - FinDisha
கோடக் மகேந்திரா வங்கி – 811 டிஜிட்டல் பேங்க் அக்கவுண்ட்
கோடக் மகேந்திரா வங்கியின் 811 டிஜிட்டல் பேங்க் அக்கவுண்டில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும், எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த கணக்கினை ஆன்லைனிலேயே நீங்கள் தொடங்கிக் கொள்ளலாம்.
இதன் மூலம் 811 virtual debit card-யும் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங், பில் பேமென்ட்ஸ், மொபைல் அல்லது டிடிஹெச் ரீசார்ஜ் என பலவும் செய்துக் கொள்ளலாம்.
இந்த சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4% வட்டியினை பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே 'மே 1' முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் குறித்து  தெரியுமா? | In SBI New Rule Will Be Applicable From May 1– News18 Tamil
எஸ்பிஐ – பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்
இதற்கு சரியான கே ஒய் சி ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டிற்கு ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு தொகை என தனியாக செலுத்த தேவையில்லை. இதன் மூலம் கட்டணம் இன்றி NEFT /RTGS செய்ய முடியும்.
4 இலவச ஏடிஎம் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இந்த சேமிப்பு கணக்கிற்கு 2.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. (இது 1லட்சம் முதல் அல்லது அதற்கு மேல் பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கு வழங்கப்படுகிறது)

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக