சிம்ம இராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனுடன் சந்திரன் நட்பு என்ற நிலையில் நின்று தனது பலன்களை அளிக்கக்கூடியவர்.
இவர்கள் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
முன் கோபம் உடையவர்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.
கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதனை அறியாதவர்கள்.
அவப்பெயர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள். அதனை எதிர்த்து போராடக்கூடியவர்கள்.
இவர்களின் உடல்நிலை சீரற்ற நிலையில் இருக்கும். ஏனெனில் நெருப்பும், நீரும் இணைவது என்பது முடியாத செயலாகும்.
வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சுகமான நித்திரை உடையவர்கள். உறக்கத்தில் எழுப்பினால் மிகுந்த கோபம் அடையக்கூடியவர்கள்.
சுக போக எண்ணங்கள் மற்றும் செயலால் தன்னுடைய உடல் நலத்தை தானே கெடுத்துக் கொள்வார்கள்.
தாய்மாமன் உறவுகளால், சாதகமான சூழல் உண்டாகும்.
செலவாளிகளாக திகழக்கூடியவர்கள்.
தான, தர்மங்கள் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும்.
தெய்வ காரியங்களுக்கு தயங்காமல் செலவு செய்யக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக