இன்றைய
காலகட்டத்தில் வங்கிகளில் இருசக்கர வாகன கடன் பெறுவது மிகவும் ஒரு எளிதான
விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கின்றன.
எனினும்
எங்கு வட்டி குறைவு? செயல்பாட்டு கட்டணம் என்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
ஆக அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது சில வங்கிகளில் எவ்வளவு வட்டி?
செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பது தான்.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆஃப் இந்தியாவில் இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, சூப்பர் பைக்குகளாக இருந்தாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது புதிய இரு சக்கர வாகனங்களாக இருந்தாலும் சரி, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கினாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.இந்த வங்கியில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.85% ஆகும். இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக உங்களது கடன் தொகையில் 1% ஆகும். நீங்கள் 1 லட்சம் ரூபாய் வரை வாகன கடன் பெற்றுள்ளீர்கள் எனில், 5 வருட கால அவகாசத்திற்கு மாதம் 2,125 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். இறுதியில் நீங்கள் வங்கிக்கு 1,27,982 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.

ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கியினை பொறுத்த வரை வருடத்திற்கு 20.90% வட்டி வசூலிக்கப்படுகிறது. இங்கு கடன் தொகையானது 20,000 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. செயல்பாட்டுக் கட்டணம் உங்களது கடன் தொகையில் 3% வசூலிக்கப்படும். இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வங்கிகளில் ஹெச்டிஎஃப்சியில் தான் வட்டி விகிதம் அதிகம்.ஆந்திரா வங்கி
ஆந்திரா வங்கியினை பொறுத்த வரையில் வாகனத்தின் மதிப்பில் பெண்கள் 90% கடனாக பெற்றுக் கொள்ளலாம். இதே ஆண்கள் 85% கடனாக பெற்றுக் கொள்ளலாம்.இந்த வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக 1% வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கியில் வட்டி விகிதம் 10.05% முதல் 10.30% ஆக வசூலிக்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 வருட கால அவகாசத்தில் நீங்கள் செலுத்துகிறீர்கள் எனில், மாதம் 2,127 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கடனை கட்டிக் முடிக்கும் போது, நீங்கள் 1,28,130 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
உங்கள் வாகனத்தின் ஆன் தி ரோடு மதிப்பில் 85% கடனாக பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.30% ஆகும். இங்கு கடன் தொகையானது 1,50,000 ரூபாய் எனில், மாதம் இஎம்ஐ 4,954 ரூபாயாகும். 3 வருட கால அவகாசத்தில் கட்டி முடிக்கும் போது 1,17,170 ரூபாயினை நீங்கள் கட்டியிருப்பீர்கள்.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கியில் உங்கள் இருசக்கர வாகன மதிப்பில் 85% தொகையினை வாகனக் கடனாக பெற்றுக் கொள்ளலாம்வட்டி விகிதம் வருடத்திற்கு 12.10% ஆகும். உங்களது வாகன கடன் 1,50,000 என வைத்துக் கொள்ளலாம். 3 வருட கால அவகாசத்திற்கு மாத இஎம்ஐ விகிதம் 3,241 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நீங்கள் இஎம்ஐயினை கட்டி முடிக்கும் போது 1,79,960 ரூபாயினை நீங்கள் கட்டியிருப்பீர்கள்.

கார்ப்பரேஷன் வங்கி
கார்ப்பரேஷன் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 10.25% ஆகும். செயல்பாட்டுக் கட்டணம் மொத்த கடன் தொகையில் 0.50% ஆகும். உங்களது கடன் தொகை 1 லட்சம் ரூபாய் எனில், 5 வருட கால அவகாசத்திற்கு பிறகு நீங்கள் 1,28,722 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.கார்ப்பரேஷன் வங்கியில் வாகனக் கடன் மட்டும் அல்ல, வாகன இன்சூரன்ஸ், பதிவு மற்றும் உதிரி பாகங்களுக்கும் சேர்த்தும் கடன் வாங்கிக் கொள்ளலாம். மொத்தத்தில் 1 லட்சம் ரூபாய் வரை இருசக்கர வாகன கடனாக வாங்கிக் கொள்ளலாம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக