சமீப காலமாக இந்தியாவில் டேட்டா நெட்வொர்க் சேவைகளைல் உச்சம் தொட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஸ்மார்போன் தயாரிப்பிலும் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில
ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் நெட்வொர்க் சேவைகளில் முன்னணி நிறுவனமாக
வளர்ந்துள்ள நிலையில், உலகளாவிய சந்தை மதிப்பிலும் பெரும் முன்னேற்றம் கண்டு
வருகிறது. மேலும் ஜியோவின் ஃபைபர் இணைப்புகள் நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு
வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் ஈடுபட உள்ளது
ரிலையன்ஸ் நிறுவனம்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் இணைந்து தரமான ஸ்மார்ஃபோன்களை உருவாக்குவதன் மூலம்
வெளிநாட்டு போன்களை விட குறைந்த விலையில் விற்கமுடியும் என கூறப்படுகிறது. இதற்காக
உள்நாட்டு மொபை நிறுவனங்களான டிக்ஸான் டெக்னாலஜிஸ், கார்பன் மொபைல்ஸ், லாவா
இண்டர்நேஷனல் ஆகிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து நவீன மாடல் மொபைல்கள் தயாரிக்கப்பட
உள்ளன.
ரெட்மி, ஒன் ப்ளஸ் போன்ற மொபைல்களில் உள்ள வசதிகளுடன் தயாரிக்கப்படும் ரிலையன்ஸ்
மொபைல்களின் ஆரம்ப விலை ரூ.4000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த மார்ச்
மாதத்திற்குள் இந்தியாவில் 165 மில்லியன் செல்போன்களை விற்க ரிலையன்ஸ்
திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக