
பிளிப்கார்ட் வலைதளத்தை உலகம்
முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அனைத்துப் பொருட்களும்
இந்த தளங்களில் எளிமையாக கிடைப்பதால் பொதுமக்கள் இதை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் சரியான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்கிறது.
அதேபோல் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் பிரதானமாக
விளங்குவது பிளிப்கார்ட், இந்த தளம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி
விற்பனை தின அறிவிப்புகள் அறிவித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய
ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் மொத்த
வாடிக்கையாளர்கள் கணக்கில் அடுக்கு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலில்
வாங்குபவர்கள் தான் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்பை அளிப்பார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள்
வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300
முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில்
ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான
நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என
தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சாம்
சி.எஸ் அவருடைய சகோதரருக்கு பரிசாக ஆப்பிள் வாட்சை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர்
செய்து அனுப்பியிருந்தார். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனமோ ஆப்பிள் வாட்ச்-க்கு
பதிலாக வெறும் கற்களை அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதுபற்றி அவர்
பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்து பணத்தை திரும்ப பெற்றுள்ளதாக
தெரிகிறது. மேலும் இந்த தளத்தில் தவறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக