Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 செப்டம்பர், 2020

நரியை வென்ற கழுதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்த ஓநாய் ஒன்று கழுதையை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்துதான் சமாளிக்க வேண்டும் எனக் கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்..!! நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.

நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை சீக்கிரம் சொல் என்றது ஓநாய். ஓநாயாரே! என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீங்கள் என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உங்கள் உயிரையும் வாங்கி விடும். அதனால் முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டுப் பிறகு நீர் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறியது.

ஓநாயும் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்தது, முள் இருக்கிறதா என ஓநாய் தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. கழுதையின் உதையைத் தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக