--------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
--------------------------------------------------
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்
புடிக்கக்கூடாது...
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும்போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்ட இருந்து கடன்
வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு? எதிர்கேள்வி
கேக்குறான்.
தலைமை ஆசிரியர் : 😂😂
--------------------------------------------------
பெண் : நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சிருச்சு..
ஆண் : ஐயோ! உன் தங்கச்சிக்குமா?
பெண் : 😳😳
--------------------------------------------------
சீனு : எனக்கு
தூக்கத்துல பேசுற வியாதி இருக்குன்னு certificate தர முடியுமா டாக்டர்?
டாக்டர் : ஏன்?
சீனு : என் மனைவியை திட்ட வேற வழி தெரியல டாக்டர்.
டாக்டர் : 😝😝
--------------------------------------------------
ஏன்? ஏன்? ஏன்?
--------------------------------------------------
கண் பார்வை தெரியாதவர்கள் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்...????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு.
கண் பார்வை தெரிந்தவர்கள் தான்
அதிகமாக கீழே விழுகின்றார்கள்.
ஏன்...???
பார்வை தான் இருக்கிறதே,
என்ற அலட்சிய போக்கு.
ஆக... விழுவதும்... விழாமல் இருப்பதும்...
கண்களை பொறுத்தது அல்ல.
அது விழிப்புணர்வு என்ற உணர்வை பொறுத்தது.
கண் பார்வை தெரியாதவர்கள் குழியில் விழுவது குற்றமாகாது.
பார்வை உள்ளவன் இரவில் விழுந்த பள்ளத்தில்,
பகலில் விழுவதுதான் குற்றம்.
--------------------------------------------------
சில தத்துவங்கள்..!!
--------------------------------------------------
⭐ சோம்பேறிகளுக்கு தான் அனைத்து விஷயமும் கடினமாக தோன்றும். முயற்சி உள்ளவனுக்கு
அனைத்தும் இலகுவாக தான் கண்ணுக்கு தெரியும்.
⭐ அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் மனம் கொண்டவர்களே...
அவர்களின் வளர்ச்சியை பார்க்கும்போது அவனது முயற்சியையும் சேர்த்து பாருங்கள்.
உங்களுக்கு பொறாமை வராது.
⭐ வெற்றி எனும் இலக்கை அடைவதற்கு யாரும் நமக்கான பாதையை உருவாக்க மாட்டார்கள்.
நாம் தான் அதற்கான பாதையை செதுக்க வேண்டும்.
--------------------------------------------------
விடுகதைகள்...!!
--------------------------------------------------
1. எட்டித் தொட நினைத்தேன், இடறி விழுந்தேன், குதித்து தொட நினைத்தேன்
குட்டிக்கரணம் போட்டேன். அது என்ன?
விடை : வானம்.
2. பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன். அவன் யார்?
விடை : நாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக