புகைபிடித்தல் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட மாட்டார்கள், புகைபிடித்த பிறகு சிகரெட் துண்டுகளை அங்கும் இங்கும் வீசுகிறார்கள். இந்த நேரத்தில், இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இதைப் பார்த்து நீங்கள் சிரிப்பு மற்றும் கோபம் இரண்டையும் நிறுத்த முடியாது.
புகைபிடித்தல் தீங்கு விளைவிப்பது என்பது அனைவருக்கும் தெரியும். மனிதர்கள் புகைபிடிப்பதற்கு தானே இந்த அறிவுரை, எனக்கு இல்லை என்று ஒரு நண்டு நினைத்துவிட்டது! நண்டும் சிண்டும் புகைப்பிடித்தால், பெரியவர்களின் வயிறு பற்றிக் கொண்டு எரியும். ஆனால், இந்த உண்மையான நண்டின் புகைக்கும் வீடியோ நமது உதடுகளில் புன்னைகையை பூக்க வைக்கிறது.
புகைபிடிக்கும் நண்டு
இந்திய வன சேவையின் அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது கேமராவில் விலங்குகள் மற்றும் பறவைகளின் சிறப்பான மற்றும் வித்தியாசமான தருணங்களை படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். தனது புகைப்படங்களை அவர் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார். அதில் பல வைரலாகின்றன. சமீபத்தில், அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் நண்டு சிகரெட்டை புகைப்பதைப் பார்க்கலாம். மனிதர்கள் மட்டுமே புகைப்பிடிப்பதாக நீங்கள் நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
Cancer taking a cancerous
puff
This is like a bad dream. Our wastage being picked by crab. We can spoil any ecosystem
with our attitude.... pic.twitter.com/HOhowVPgyM
— Susanta Nanda IFS (@susantananda3) September 20, 2020
இந்த வைரல் வீடியோவைப் பார்த்து, அது விரும்பி சிகரெட் புகைக்கிறது என்று நினைத்துவிட முடியாது. புகைபிடித்துக் கொண்டிருந்த சிலர் சிகரெட் துண்டை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டுச் சென்றார்கள். இரை தேடி வந்த நண்டு, இது சாப்பிடும் பொருள் என்று நினைத்து வாய்க்குள் வைக்கிறது. அப்போது அதிலிருந்து புகை வெளியே வரத் தொடங்குகிறது. அது தொடர்ந்து தனது நகங்களின் உதவியுடன் சிகரெட்டை உள்ளிழுக்க முயற்சிக்கிறது. நண்டின் இந்த செயல் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது. சிரிப்பு சப்தங்களை வீடியோவின் பின்னணியில் கேட்கலாம்.
மனிதாபிமானமற்ற செயல்
ஒருபுறம், சுற்றுச்சூழலையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக பேரணிகளை மேற்கொள்கிறோம். பல நிகழ்ச்சிகளை செய்கிறோம். மறுபுறம், இதுபோன்ற தவறான செயல்களையும் ஊக்குவிக்கிறோம். இது போன்ற செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எரியும் சிகரெட்டை கண்ட இடத்திலும் எறிவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மிகவும் கெடுதல் விளைவிக்கும் என்பதை இந்த வைரல் வீடியோ புரிய வைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக