இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கிறது. 'எனக்கு கொரோனா தொற்று வந்துவிட்டதோ’ என்று அஞ்சாதவர்கள் இல்லை. ஆனால் இந்த அச்சத்துடன், இந்த வைரசிலிருந்து தப்பிப்பது மற்றும் இதைத் தடுப்பதற்கான வழிகளையும் மக்கள் இப்போது அறிந்து கொண்டனர். ஒரு வேளை நம் குடும்பத்தில் ஒருவருடைய கொரோனா பரிசோதனையின் முடிவு நேர்மறையாக வந்தால் (Corona Positive), என்ன செய்வது?
உங்களுக்கு தொற்றின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன? இங்கே பார்க்கலாம்:
-உங்கள் வீட்டிலேயே உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருங்கள். பாதுகாப்பு இல்லாமல் அவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள். – நாள் முழுதும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும், நாள் முடிவில் அவற்றை அப்புறப்படுத்தி விடுங்கள்.
- குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பராமரிப்பது அவசியம்.
- உங்கள் காய்ச்சலின் அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
COVID Positive-ஆக இருந்து, அவர்களுக்கு காய்ச்சல் இல்லாவிட்டாலும், அவர்களும் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். இது தவிர, நீங்கள் பரிசோதனை செய்திருந்தால், அதன் முடிவுகள் வர 2 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம். அந்த காலகட்டத்திலும் நீங்கள் உங்களை COVID-19 நோயாளியாகக் கருதி வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்து, உங்கள் உடலில் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை என்றாலும், உங்களை 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் (Home Quarantine) கொள்ளுங்கள். இந்த 10 நாட்கள் முடிந்ததும், உங்களுக்கு தனிமை தேவையில்லை.
(குறிப்பு: எந்த வித நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக