ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம்
கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து லண்டன்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை
கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் முறையில் 3 ஆம் கட்ட
பரிசோதனையை எட்டியது.
இந்நிலையில் 3 ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை
நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட
நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் பரிசோதனையின் போது பாதிக்கப்பட்டவர்
யார், எந்த நாட்டை சேர்ந்தவர், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை
குறித்து தகவல் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக