Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 செப்டம்பர், 2020

செயற்கரிய சாதனை

ஒரு நாள் மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்க எண்ணி, அதைப்பற்றி சபையினரின் கருத்துக்களைக் கேட்டார். முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து நின்று, சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்குத் தகுதியானவர் இல்லை என்று தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர்.

அந்தச் சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த முல்லாவிற்கு அவருடைய எதிரிகளின் பேச்சு காதில் விழுந்தது. உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பது போல நடந்து சபைக்குள் பிரவேசித்தார். அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

மன்னரோ! முல்லாவைப் பார்த்து சிரித்தவாரே, ஏன் முல்லா ஒரு விலங்கு போல நான்கு கால்களில் நடந்து வருகிறீர், உமக்கு என்னப் பைத்தியமா? என்று கேட்டார். முல்லா எழுந்து மன்னரை வணங்கி மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை. அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்தேன் என்றார். இனி என் அறிவாற்றலைப் பற்றி யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்றார்.

முல்லாவின் எதிரிகளான பொறாமைக்காரர்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழ்ந்து பரிசுகள் அளித்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக