துலாம்
ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் சந்திரன் சம நிலையில் இருந்து
புரியும் நற்பலன்கள் மற்றும் தீயப் பலன்கள் பின்வருமாறு :
பயந்த சுபாவம் உடையவர்கள்.
உயர்ந்த எண்ணங்களையும், கொள்கைகளையும் கொண்டவர்கள்.
பல தொழில்கள் பற்றிய அறிவும் அதில் அதிகாரம் செலுத்தும் நுட்பமும் உடையவர்கள்.
பிரச்சனைகளை விரும்பாமல் விலகிச் செல்லக்கூடியவர்கள்.
தன் வேலைகளை முடிப்பதில் மட்டும் கவனம் உடையவர்கள்.
ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் சீரான வாழ்க்கை அமைப்பை உடையவர்கள்.
உடை மற்றும் ஆபரணங்கள் மீது ஆர்வம் உடையவர்கள்.
எந்த தொழில் செய்தாலும் அதில் உள்ள நெழிவு சுழிவுகளை அறிந்து
செயல்படக்கூடியவர்கள்.
யாரையும் சரி சமமாகவும், எதிலும் நேர்மையாகவும் செயலாற்றும் திறமை உடையவர்கள்.
பொதுச்சேவை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள்.
ஆன்மீக எண்ணங்களை உடையவர்கள்.
அறுசுவை உணவு சுவைப்பதில் வல்லவர்கள்.
மனைவி மீது அன்பும், காதலும் உடையவர்கள்.
மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.
சாந்தமான பேச்சுகளை கொண்டவர்கள்.
அனைவரையும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக