----------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
----------------------------------------------
சரண் : உங்க மனைவி கிணத்துல விழுந்து தத்தளிக்கும்போது கூட நீங்க ஏன் காப்பாத்தல?
அருண் : என்னைய உணர்ச்சிவசப்படக்கூடாது-ன்னு டாக்டர் சொல்லியிருக்காரு...
சரண் : 😆😆
----------------------------------------------
மாலா : உன் கணவரை எதுக்கு கோபமா திட்டுன?...
சீலா : நான் போன் பண்ணுனா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு...
அதான்.
மாலா : 😬😬
----------------------------------------------
சிறந்த வரிகள்...!!
----------------------------------------------
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக்காட்டிலும்
ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
பகைமையை அன்பால் வெல்லுங்கள். சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.
மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில்
எல்லாம் மேலான பாக்கியம்.
அன்பில்லாத இடத்தில்தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு
செலுத்த முடியாது.
----------------------------------------------
இது உண்மையா?
----------------------------------------------
உனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்று
நீ தெரிந்து கொண்டால்,
ஆண்டவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே கோவிலுக்கு போவாய்...
----------------------------------------------
சேமிப்பு..!!
----------------------------------------------
சேமிப்பு என்பது மூன்று விதமாக இருக்க வேண்டும்...
1. சோறு - இன்றைய தேவை...
2. அரிசி - நாளைய தேவை...
3. விதை நெல் - எதிர்கால தேவை...
----------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------
1. காவல் காக்கும், ஆனால் நாயல்ல. காலை கடிக்கும், ஆனால் செருப்பல்ல. அது என்ன?
விடை : முள் செடி
2. ஒளி தரும், விளக்கல்ல. வெப்பம் தரும், நெருப்பல்ல. பளபளக்கும், தங்கம் அல்ல.
அது என்ன?
விடை : சூரியன்
3. கண்ணுக்குள் இருப்பவன் கவலைக்கும், மகிழ்ச்சிக்கும் எட்டி பார்ப்பான். அவன்
யார்?
விடை : கண்ணீர்
4. புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன். அவன் யார்?
விடை : மான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக