Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வெங்காயம்...!!

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் தையமின் உள்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. நீரிழிவு நோயாளி தினமும் தனது உணவில் வெங்காயத்தை சேர்த்தால், பல நன்மைகள் கிடைக்கும்.


வெங்காயம் உடலின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால், பல தொற்று நோய்களையும் தவிர்க்கலாம். உடல் அடிக்கடி நோய்வாய்ப்படாது. சளி, கபம் ஆகியவை தொடர்பான பிரச்சினையிலிருந்து நீங்கள் விலகி இருக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, வெங்காயத்தை சாலட்டாக உட்கொள்ளலாம்.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.


வெங்காயத்தில் உள்ள சல்பர் சேர்மங்கள், ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீரை நன்கு வெளியேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக