Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

மொபைல் கட்டணங்கள் உயரப்போகுது - மக்களே உஷார்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ஏஜிஆர் வருவாயில் செலுத்த வேண்டிய 10% தொகையை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மீதத் தொகையை 10 தவணைகளாக 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முதல் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
​நிறுவனங்களுக்கு நெருக்கடி

இந்த உத்தரவால் ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதத்திற்குள் சுமார் ரூ.2,600 கோடி செலுத்த வேண்டியிருக்கும். வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.5,000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாயை ஏர்டெல் நிறுவனம் 10 விழுக்காடும், வோடஃபோன் ஐடியா 27 விழுக்காடும் உயர்த்த வேண்டும். இதனால் ரீச்சார்ஜ் கட்டணங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் செலவுகள்

ஸ்பெக்ட்ரம் செலவுகள், இதர முதலீடுகளை ஒதுக்கிவைத்தால் கூட, தற்போதைய சூழலில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வருவாய் கிடைக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதது. இதை சமாளிக்க நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

தீராத கடன் சுமை


இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கிய பின் அனைத்து நிறுவனங்களுமே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் எல்லா நிறுவனங்களுமே ஏதோவொரு வகையில் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழலில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் மிக மோசமான நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருக்கிறது. எனவே இந்நிறுவனம் ரீச்சார்ஜ் கட்டணங்களை அதிகம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா பக்கமும் முள்வேலி

எந்த நிறுவனமாக இருந்தாலும், ரீச்சார்ஜ் கட்டணத்தை ஒரு எல்லைக்கு மேல் உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவதை தடுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையும்போது, குறைந்த கட்டணத்தில் நல்ல சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மாறிவிடக்கூடும். இதன் விளைவாக மீண்டும் வருவாய் அடிவாங்கும். எனவே, எந்த பக்கம் போனாலும் முள்வேலி என்ற இக்கட்டான சூழலில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக