Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

பணம் அனுப்பாமலேயே அக்கவுண்ட்ல பணம் போயிருச்சா.... உடனே இதை பண்ணுங்க!

ஆன்லைன் மூலமாகப் பணம் அனுப்பும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் அனுப்புவது நிறுத்தப்பட்டு, வங்கிக் கணக்கில் அந்தப் பணம் பிடிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளுக்குச் சென்று நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய காலம் மாறி ஒரே நிமிடத்தில் கையில் உள்ள மொபைல் போன் மூலமாகப் பணத்தை அனுப்புவதும் மற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்வதும் மிகவும் சுலபமாகிவிட்டது. வங்கிப் பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் மொபைல் ரீசார்ஜ், மின் கட்டணம், ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வந்தபிறகு ரொக்கப் பரிவர்த்தனைகளும் குறைந்துள்ளன.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் பல்வேறு மொபைல் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ‘யோஜோ லைட்’ செயலி ஆகும். இச்செயலி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இச்செயலியில் பணம் அனுப்ப வேண்டியவர்களின் கணக்கு விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நொடிப் பொழுதில் யாருக்கு வேண்டுமானாலும் சுலபமாகப் பணம் அனுப்பிவிடலாம். இதில் ஒரு முறை ரூ.10,000, ஒரு நாளில் ரூ.25,000 என்ற பரிவர்த்தனைக் கட்டுப்பாடும் உள்ளது.

பணம் பிடிக்கப்பட்டால் என்ன செய்வது?


எவ்வளவுதான் தொழில்நுட்ப வசதிகள் முன்னேறினாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் கோளாறுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பணம் அனுப்பும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் நம் வங்கிக் கணக்கில் பணம் காணாமல் போயிருக்கும். ஆனால் அந்தப் பணம் போக வேண்டிய இடத்துக்குப் போயிருக்காது. இவ்வாறு ஏற்பட்டால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ லைட் செயலியிலேயே அப்பணத்தைத் திரும்பப் பெற உடனடியாகப் புகார் அளிக்கலாம். யோனோ லைன் செயலியில் ‘Payment History' என்ற வசதியில் நீங்கள் புகார் அளிக்கலாம். இதையடுத்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக