சமீபகாலமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க முன்னணி நடிகைகள் தயாராக இல்லை என்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உழைப்பால் உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 7, 8 படங்கள் ரிலீஸ் செய்து ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் எந்த ஒரு படமும் வெற்றி பெறுவதில்லை என்பது தான் சோகம். இந்நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்துமே தற்போது OTTக்கு சென்று கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க விஜய் சேதுபதியுடன் முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க ரெடியாக இல்லை என்பதை போன்ற ஒரு செய்தி பரவலாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் போது அவரது நடிப்பு மட்டுமே மிகையாக தெரியும் நிலையில் மற்ற நடிகைகள் என்னதான் நடித்தாலும் நடிகைகளின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.
இன்னும் ஓபன் ஆக சொல்ல வேண்டுமென்றால் விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருப்பதால் முடிந்தவரை விஜய் சேதுபதியின் படங்களை தவிர்க்கவே நினைக்கிறார்கள் முன்னணி நடிகைகள்.
இருந்தாலும் சம்பளம் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் நடிக்க தயார் தான் என்கிறது ஒரு குரூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக