Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 7 செப்டம்பர், 2020

உண்மையான மதிப்பு

ஒரு நாள் அரண்மனைப் பழத்தோட்டதில் துருக்கி மன்னரும், முல்லாவும் உலாவிக் கொண்டிருந்தனர். மன்னர், முல்லா அவர்களே தாங்கள் ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனுடைய மதிப்பை கூறிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

முல்லா, ஆம், எனக்கு இந்த ஆற்றல் அல்லாவின் அருளால் தான் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். துருக்கி மன்னன் என்னுடைய மதிப்பு என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம். தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள் தான் என்றார் முல்லா.

முல்லாவிடம் மன்னர், தங்களை என் மதிப்பு பற்றி சொல்லச்சொன்னால், என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பைப் பற்றி கூறுகிறீர்கள் என்று கோபமாக கேட்டார்.

மன்னர் பெருமானே! நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். உடலிருந்து உயிர் பிரிந்து விட்டால் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்காது.

அழியக்கூடிய உடம்புக்கு மதிப்பு இருக்காது. முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரை சிந்திக்க வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!