Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 செப்டம்பர், 2020

மருந்தீசர் திருக்கோயில் - திருக்கச்சூர்

 Thirukachur Marundeeswarar temple,திருக்கச்சூர்,மருந்தீசர்,ஈசனை தேடி எனது  பயணங்கள் ... ...:::குமரேசன்,Shiva Temples of Tamilnadu - Paadal Petra  Sivasthalangal - An Introduction,Offers info about the ...

இறைவர் திருப்பெயர் : மருந்தீசர்

இறைவியார் திருப்பெயர் : இருள் நீக்கி அம்மையார்.

தல வரலாறு:

இக் கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும். இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.இந்திரன் தன்னோட தீராத  வியாதிக்காக நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும்  பலை ,அதிபலை என்ற மூளிகை  வேண்டி  சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம் . அதனால,  நாரதரிடம் உபாயம் கேட்க,  அன்னையை மறந்து தவம் இயற்றியதால்,  அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம்,

தன் தவறை உணர்ந்த இந்திரன்,  அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம்.  பிறகு அன்னை மனம்குளிர்ந்து மூலிகையை அருளினாராம்.  இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும்,  மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் ”இருள் நீக்கி அம்மையார்”என்றும் அழைக்க படுகிறாரார்களாம்!!. அகத்தியரும்,  அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம் .

சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்மமுக சண்டிகேஸ்வரராக சேவை செய்கிறார்.  இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம்.  சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில்  அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார்.  

பைரவர் சன்னதியும் காணபடுகிறது.மேலும்,  விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகம் அமைந்து இருப்பது இகோவிலின் விஷேசம்.  இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலா. ம் மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடுமாம்.  பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.  மேலும், சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு செல்லும் போது வீழ்ந்த சிறிய துண்டு என்றும் சொல்ல படுகிறது. இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறனும்ன்னு  சிவபெருமான்  வரம் அருளினாராம். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளருமாம் .


சிறப்புக்கள் :

இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம் .

மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடுமாம்.

பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.




போன்:

அமைவிடம் மாநிலம் :

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

 காலை 7:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.

இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம் .

இக் கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும். இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக