Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 செப்டம்பர், 2020

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்?

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்?

லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) சூப்பர் ஹிட் படங்களான 'Maanagaram (மாநகரம்)' மற்றும் 'Kaithi (கைதி)' படங்களின் இயக்ககி பிரபலமானவர். நடிகர் Vijay (விஜய்) நடிப்பில் 'Master (மாஸ்டர்)' படத்தின் வெளியீட்டுக்காக இளம் இயக்குனர் காத்திருக்கிறார். சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படம் குறித்து தகவலைவெளியிட்டார். 

அடுத்த படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்தார், இந்த சிறப்பு அறிவிப்பு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது, சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், கமல்ஹாசன் (Kamal Haasan) தனது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது என்ன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

கமல்ஹாசன் அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் தயாரிப்புக்கு ஆகும் நாட்கள் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. அது என்ன என்பது பற்றிய விவரம் கூடிய விரைவில் தெரிய வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் தான் தன் அடுத்த படத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார். முன்னதாக அந்த படத்திற்கு தற்காலிகமாக '(Kamal Haasan 232) ' என பெயர் வைக்கப்பட்டது. தற்போது அந்த படத்திற்கு எவனென்று நினைத்தாய் (Evanendru Ninaithai) என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டு இருந்தார். அதனால் அதற்கு முன்பே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனிருத் (Anirudh Ravichander) இதற்கு இசை அமைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக