சியோமி நிறுவனம் இன்று தனது புதிய பவர் பேங் சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் சியோமி ரசிகர்கள் அதிக சக்தி கொண்ட பவர் பேங் சாதனங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர், அவர்களின் எதிர்பார்ப்பை தற்பொழுது சியோமி நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.
சியோமியின் 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் பவர் பேங்
குறிப்பாக அதிக சக்தி கொண்ட 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் திறன் கொண்ட அற்புதமான பவர் பேங்க்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய பவர் பேங்க் சாதனங்கள் பற்றிய விலை விபரம் மற்றும் முழு விபரங்களுடன் இதன் நம்பமுடியாத விலை விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த புதிய பவர் பேங்க் சாதனங்களுக்கு Mi Power Bank 3i என்று நிறுவனம் பெயரிட்டுள்ளது.
புதிய பவர் பேங்க் எங்கு வாங்க கிடைக்கும்?
சியோமி நிறுவனத்தின் 10000 எம்ஏஎச் திறன் கொண்ட மி பவர் பேங்க் 3i சாதனம், மிட்நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் ப்ளூ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அமேசான் நிறுவனத்தின் Amazon.in மற்றும் சியோமியின் mi.com ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மேட் இன் இந்தியா தயாரிப்பா?
சியோமியின், 20000 எம்ஏஎச் மி பவர் பேங்க் 3i சாதனம், சாண்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய பவர் பேங்க் சாதனங்களும் 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 20000 எம்ஏஎச் மாடலில் மூன்று போர்ட் வெளியீடு உள்ளது, அதே நேரத்தில் 10000 எம்ஏஎச் மாடலில் டூயல் போர்ட் வசதி உள்ளது.
18W மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங்
10000mAh கொண்ட Mi பவர் பேங்க் 3i சாதனம், 18W மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இவை முறையே 4 மணி நேரம் முதல் 6 மணிநேரம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. 20000mAh கொண்ட Mi பவர் பேங்க் 3i சாதனமும் 18W மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது.
புதிய லோ-பவர் மோடு பட்டன்கள்
இவை முறையே 6.9 மணி நேரம் 6 மணி நேரம் சார்ஜிங் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த இரண்டு பவர் பேங்க்களும் மேம்பட்ட அட்வான்ஸ் சர்க்யூட் பாதுகாப்பின் 12 அடுக்குகளைக் கொண்டுள்ளது. மி பேண்ட் மற்றும் மி ப்ளூடூத் ஹெட்செட் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய, லோ-பவர் மோடும் இதில் உள்ளது. சைடில் உள்ள லோ-பவர் மோடு பட்டனை இரண்டு முறை அழுத்தி ஆக்டிவேட் செய்யலாம்.
பவர் பேங்க் போர்ட் விபரங்கள்
புதிய 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் சாதனங்கள் இரண்டுமே யூ.எஸ்.பி-ஏ போர்ட்கள், யூ.எஸ்.பி டைப்-சி, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், நான்கு எல்.ஈ.டி விளக்குகளுடன் வருகிறது.
இப்படி ஒரு மலிவு விலையா?
Mi Power Bank 3i சாதனத்தின், 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 3i, 251 கிராம் எடையுடன், 20000 எம்ஏஎச் பவர் பேங்க் 3i435 கிராம் எடையுடன் வருகிறது. சியோமியின் 10,000mah பவர் பேங்க் ரூ .899 என்றும் 20,000 mah பவர் பேங்க் ரூ .1,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக