உங்கள் நிதி நிலையை எப்படி நேர்த்தியாக திட்டமிடுவது என்பதை பார்க்கலாம்.தீபாவளி, நவராத்திரி என பண்டிகைக்காலம் நெருங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தையொட்டி அனைவருமே சில திட்டங்களை வகுத்திருப்போம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பண்டிகைக் காலம் சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே, நாமும் வித்தியாசமாக இந்த முறை நமது முதலீடுகளையும், நிதியையும் பற்றி திட்டமிடலாம்.
அவசரகால நிதி
அவசரகால நிதி என்பது உங்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் சம்பளமே இல்லாமல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய தொகை. இதில் உங்கள் குடும்பச் செலவுகளும் உள்ளடங்கும். பெரும்பாலும், அவசர கால நிதிக்கு ஏற்றது லிக்விட் ஃபண்ட் திட்டங்கள்தான்.
சேமிப்புக் கணக்குகளை காட்டிலும் லிக்விட் ஃபண்ட்களில் பணத்தை போட்டால் கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மிக அவசர தேவை இல்லாதபட்சத்தில் இந்த பணத்தில் கைவைக்க வேண்டாம்.
இதில் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவை அடங்கும். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் காப்பீட்டுக்கு நிதி ஒதுக்கலாம். அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் வெளிநாட்டு பயணக் காப்பீடும் பெறலாம். சொந்த வீடு இருந்தால் வீட்டுக் காப்பீடு வாங்கலாம்.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பை உறுதிசெய்தபின் குறுகியகால சொத்துகளில் முதலீடு செய்வது நலம். இது, அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தேவையான செலவுகளை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தேவையான நிதியை இதற்கு ஒதுக்கிவைக்க வேண்டும். கல்வி, வீடு வாங்குதல் போன்றவை இதில் அடங்கும்.
குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான இலக்குகளுக்கு இதில் நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், இன்சூரன்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். பணி ஓய்வு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக