Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஊரடங்கு முழுவதும் நீக்கப்படுகிறதா; தமிழக அரசின் அடுத்த கட்ட முடிவு என்ன?

 தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு | Lockdown Extended till  july 31st in tamilnadu- Dinamani

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்குமா, இல்லை முடிவுக்கு வருகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் காட்டி வருகிறது. இதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனை தமிழக அரசும் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் இன்று சமர்பித்தனர். அதில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு செய்ய வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என்னென்ன என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமானது நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகும் இலவச அரிசி வழங்குவதை நீட்டிக்க வேண்டும். வல்லுநர்கள் ஆய்வின்படி வரும் 2020-21ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 1.71 சதவீதம் அதிகரிக்கும் அல்லது சரிவைச் சந்திக்கும்.

எந்தளவிற்கு சரியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜிஎஸ்டி வருவாய், பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு, மின்சார பயன்பாடு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் காண்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கொரோனாவிற்கு முன்பிருந்ததைப் போல தமிழகத்தின் பொருளாதாரம் இரண்டே மாதங்களில் மீண்டு வரும்.

நடப்பாண்டில் மாநில அரசின் கடன் தொகை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. இருப்பினும் கொரோனாவிற்கு எதிரான போரில் சுகாதாரத்துறைக்கு ரூ.5,000 கோடியை மாநில அரசு ஒதுக்கியே தீர வேண்டும். அதிகப்படியான செலவீனம் பொருளாதாரத்தை தூண்டிவிடும் ஒரு கருவியாக அமையும். மாநிலத்தின் தொழிற்துறை முதலீட்டு கார்ப்பரேஷனுக்கு ரூ.1,000 கோடி ஈக்விட்டி முதலீடாக கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வண்ணம் அதிகப்படியான தொழிற்பேட்டைகளை கட்டமைக்க வேண்டும். இது பொருளாதாரம் மீண்டு வர உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். இதுபற்றி ஆலோசனை செய்த பிறகு, தமிழகத்தில் ஊரடங்கு முழுவதும் நீக்கப்படுகிறதா அல்லது தொடர்கிறதா என்று மாநில அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக