Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் எப்போது?

schoolகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கடந்த 2 மாதங்களில் படிப்படியாக அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன

 

மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களை விருப்பத்தின் பெயரில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் இறங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது

 

இந்த அனுமதியின்படி ஆந்திரா பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் வகுப்புகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன

 

மேலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்பினால் மட்டுமே வகுப்புகளுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வகுப்புக்கு வரும் ஒவ்வொரு மாணவரும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டுமென்றும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவை கடைபிடிக்க வேண்டும் என்றும் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வழிகாட்டி நெறிமுறைகளை அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

அண்டை மாநிலமான ஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக