அமெரிக்கா
சீனா இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அமெரிக்கா
சீனாவுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்கா
அடுத்தடுத்த தடைகளை சீனா மீது விதித்து வருகின்றது. ஏனெனில் சீன நிறுவனங்கள், சீன
அரசுக்கு உளவாளிகளாக செயல்பட்டு வருகின்றன. அதோடு அமெரிக்காவின் தொழில்நுட்பம்
திருடப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
அமெரிக்காவின்
இந்த அதிரடியான நடவடிக்கைகள் சீனாவுக்கு பாதகமாக தோன்றினாலும், மற்ற நாடுகளுக்கு
நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சீனாவுக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான
வாய்ப்புகள் எல்லாம் நழுவி, மற்ற நாடுகளுக்கு கிடைத்துக் கொண்டுள்ளது.
சாம்சங்கிற்கு
பெரிய ஆர்டர்
ஏனெனில் அமெரிக்கா சீனாவின் டெக்
ஜாம்பவான் ஆனா ஹூவாய் நிறுவனத்திற்கு கடுமையான விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில்
அமெரிக்காவின் வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க் நிறுவனம் 6.6 பில்லியன் டாலர்
மதிப்புள்ள ஆர்டரை சாம்சங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இது கொரோனாவின் காரணமாக
பின்னடைவை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
சாம்சங்குடன்
ஒப்பந்தம்
அதோடு சாம்சங் நிறுவனம் தனது இழந்த
சந்தை பகுதியை மீட்டெடுக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தமானது
கடந்த வெள்ளிக்கிழமையன்று இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமானது அடுத்து வரும்
டிசம்பர் 2025 வரை செல்லுபடியாகும் எனவும் பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில்
சாம்சங் தெரிவித்துள்ளது.
5ஜியை
மேம்படுத்துவோம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில்,
இதுவரை சாம்சங்கிற்கு கிடைத்த ஒப்பந்தங்களிலேயே மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இது
குறித்து சாம்சங் நிறுவனம் வெரிசோனின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அனுபவங்களை
மேம்படுத்த 5ஜி கண்டுபிடிப்புகளின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்.
சீனாவுக்கு
பலத்த அடி
உலகின் மிகப்பெரிய மெமரிசிப் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் கேஜெட் தயாரிப்பாளரான சாம்சங், 5ஜி சந்தையில் தனது சந்தையினை
விரிவுபடுத்தி வருகின்றது. இது ஆறாவது தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளில் முதலீடு
செய்வதற்கும் கடுமையாக முயன்று வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் பற்றிய முழுமையான
விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால் இது சீனாவுகு சரியான அடி என்பது மட்டும்
உண்மையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக