ஆகஸ்ட் 1945 ஆம் ஆண்டு அணு ஆயுதத்தின் கண்டுப்பிடிப்பால் அணுயுகத்தின் புதிய ஆரம்பம் துவங்கியது. அது மனித வரலாற்றில் புதிய கட்டத்தை உருவாக்கியது. இது மனித இனம் உருவாக்கிய விஞ்ஞானத்தின் அழிவுக்கான அடுத்தக்கட்டமாக இருந்தது.
அமெரிக்காவை தொடர்ந்து விரைவாக யு.எஸ்.எஸ்.ஆர் (1949), இங்கிலாந்து (1952), பிரான்ஸ் (1960) மற்றும் சீனா (1964) ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்க துவங்கின. இந்த பரவல் சில காலங்களில் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவக்கூடும் என நம்பப்பட்டது.
ஆனால் உண்மையில் இஸ்ரேல் (1968/70), இந்தியா (1974/1998), தென்னாப்பிரிக்கா (1979), பாகிஸ்தான் (1998) மற்றும் வடக்கொரியா (2006) ஆகிய நாடுகள் மட்டுமே தற்சமயம் வரை அணுசக்தி திறனை பெற்றுள்ளன.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான வளங்களை கொண்ட பல செல்வாக்குமிக்க செல்வ நாடுகள் உருவாகியுள்ளன. அதே போல அணுசக்தி தாக்குதல்களை பெற்ற நாடுகளும் உள்ளது. இந்த அணு ஆயுதங்கள் என்பவை உலகளாவிய ஆட்சிகள் மீதான அணுகுமுறையையே மாற்றுகின்றன.
அணு சின்னம்
அணு ஆயுதங்களுக்கு ஒரு சமூகம் கற்பிக்கும் பொருள் மற்றும் தரம் ஆகியவை அணுசக்தி சிம்பாலிசம் என அழைக்கப்படுகிறது. இவை வெடிகுண்டுடன் நாம் தொடர்புப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் குணங்களை தீர்மானிக்கிறது.
அரசுகள் அனைத்தும் அணுக்குண்டுகளை கையகப்படுத்திய நேரத்தில் அணுகுண்டு கெளரவம் மற்றும் மகத்துவத்தின் சின்னமாக பார்க்கப்பட்டது. 1952 சமயத்தில் இங்கிலாந்து அணு ஆயுதங்களை அதிகமாக தயாரித்தது.
இது உலக அரங்கில் இங்கிலாந்தின் கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து சர்வதேச விவகாரங்களில் பிரிட்டன் தனது பங்கை அணு குண்டுகள் வழி புதுப்பித்தது.
அத்துடன் நோட்டோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் தலைமையை பலப்படுத்தியது.
தீமை சின்னம்
எப்படி இருந்தாலும் பெரும்பான்மையான நாடுகளை பொறுத்தவரை அணுக்குண்டு என்பது நியாயப்படுத்த முடியாத அழிவை ஏற்படுத்தும் தீமையின் சின்னமாக பார்க்கப்பட்டது. அணு ஆயுதங்கள் ஒழுக்க கேடானவையாக பார்க்கப்பட்டன.
போரின் போது தாக்குதல் என்கிற பெயரில் கொடுக்கப்படும் பதிலடிகள் கூட நியாயமற்றவையாக இருந்தன. எனவே எந்த வகையிலும் அதிக உயிர்களை பலி கொள்ளும் அணு ஆயுதங்கள் அநியாயமான விஷயமாகவே பார்க்கப்பட்டன.
ஆனால் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை கொண்ட பல நாடுகள் நெறி முறை அடிப்படையில் பல நாடுகள் பயன்படுத்தவே விரும்பாத ஒன்றை அதிகமாக உருவாக்குவதற்கு எந்த வித நியாயமான காரணத்தையும் முன் வைக்கவில்லை.
அணு விதிமுறைகள்
சமூகங்களும் அரசாங்ககளும் அணு ஆயுதங்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தன. ஆனால் 1945 முதல் 1968 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அணு ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு உலகளாவிய ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.
ஐந்து அணுசக்தி நாடுகள் அணு குண்டால் ஏற்படும் கடுமையான விளைவுகளை பற்றியும் கவலைப்படாமல் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கி வருகின்றன. அணு ஆயுதங்களை கையகப்படுத்துவது ஏற்ற கொள்ள முடியாத விஷயமாக இருந்தது.
எனவே இதற்காக ஒரு புதிய விதிமுறையை உருவாக்குவதற்காக சர்வதேச கட்டமைப்பில் 1968 ஆம் ஆண்டு அணுசக்தி பரவல் தடை குழு (என்.பி.டி) என்னும் அமைப்பு அணு ஆயுதங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
என்.பி.டி
அணுசக்தி பெருக்கத்திற்கு எதிராக உலகளாவிய ஒருமித்த கருத்தை அமல்படுத்த என்.பி.டி ஆலோசனை செய்தது. இதற்காக என்.பி.டி பல அத்தியாவசிய செயல்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் அணுசக்தி பெருக்கத்தை கண்காணிக்க துவங்கியது.
இதனால் என்.பி.டி மீது அண்டை நாடுகளுக்கு நம்பிக்கை வந்தது. இந்த அமைப்பு அணுக்குண்டை அதிகாரபூர்வமாக தனிமைப்படுத்தியும் பின் தங்கிய தன்மையின் அடையாளமாகவும் மாற்றியது.
அணு ஆயுதங்கள் வளர எந்த விதத்திலும் என்.பி.டி காரணமாக இருக்கவில்லை. ஆனால் அது அரசாங்கத்தின் கூட்டணிகளை வலுப்படுத்த எண்ணியது. என்.பி.டியின் ஒருமித்தமான கருத்தை பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக்கொண்டதால் அரசுகள் அணு ஆயுதங்களை வாங்குவதற்கு சாத்தியமில்லாமல் போனது.
உள்நாட்டு அரசியல்
அணு ஆயுதம் குறித்து ஒரு அரசு கொண்டுள்ள நம்பிக்கைகள் விதிமுறைகளை பாதிக்கும் வகையில் இருந்தால், இறுதி அணுசக்தி முடிவு உள்நாட்டு அரசியல் மட்டத்தின் அடித்தளத்தை கொண்டே முடிவு செய்யப்படும்.
அணு ஆயுத திட்டத்தை பொறுத்தவரை நாட்டின் ஒரு மாநிலத்திற்கு அணு ஆயுத திட்டத்தின் மீது உள்நாட்டு ஆதரவு இல்லையென்றாலும் அவர்களால் அணு ஆயுதங்கள் வாங்க முடியாது.
உலகம் முழுவதும் உலகமயமாக்கம் ஆகி வரும் நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி தலைமையிலான தொழில்மயமாக்கல் மற்றும் உலக சந்தைக்கான கொள்கைகள் என பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கே அனைத்து நாடுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
பொருளாதார நடவடிக்கை
எடெல் சோலிங்கன் என்றொரு வார்த்தையுண்டு. இதன் பொருள் ‘பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகப்படுத்த வேண்டும். ராணுவ செலவுகளை கட்டுப்படுத்துதல், வர்த்தகத்திற்கான தடைகளை குறைத்தல்’ என்று பொருளாகும்.
எனவே எந்த ஒரு நாடும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை காண விரும்பினால் அந்த நாடு ராணுவ செலவுகளை கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி மீது தனது பார்வையை திருப்ப வேண்டும். எனவே அவை அணு ஆயுதங்களை செய்வது பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது.
இதனால் பெரும்பாலான மாநிலங்கள் அணு ஆயுத திட்டங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மற்ற சமூக செலவுகள் மற்றும் சிக்கல்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள்.
லண்டன்
லண்டன் தேசமானது அணுசக்தி இயந்திரங்களை இயக்க ஆண்டுக்கு 2 முதல் 2.4 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது. மேலும் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலை நவீனப்படுத்த 31 பில்லியன் டாலர்கள் செலவு செய்ய உள்ளனர்.
எனவே எந்த ஒரு சிறிய அளவு பொருளாதாரம் கொண்ட நாடாக இருந்தாலும் அவர்களின் செலவீனங்களுக்கு நடுவே அவற்றிற்கு பாதகம் இல்லாமல் அணுசக்தி ஆராய்ச்சியை செய்ய முடியாது. அணுசக்தி விதிமுறைகளை பின்பற்றாத நாடுகளின் முடிவுகளின் என்னவென்றால் “அணுகுண்டுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. அது பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உருவாகிறது” என்கின்றனர்.
முன்னோக்கிய வளர்ச்சி
அணு ஆயுதம் குறித்த எதிர் மறையான சர்வதேச விதிமுறைகள் மற்றும் நவீனகால அணு ஆயுத திட்டம் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏன் பரவலாக அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படவில்லை? என்ற கேள்வி பரவலாக இருப்பதை பார்க்கிறோம்.
பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் பரவலாக இல்லாத ஒரு ஆட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டது. இது பெரும்பான்மையான நாடுகளை கையகப்படுத்தும் நிகழ்வை தடுத்து நிறுத்துவதில் திறம்பட செயல்பட்டது.
ஆனாலும் கூட சர்வதேச சமூகம் இந்த் ஆட்சியை ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளவில்லை. அதன் ஆதரவாளர்களால் அந்த ஆட்சி கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருவதால் அவர்கள் ஒருங்கிணைந்த கூட்டாக இருந்தனர். இதனால் இந்த ஆட்சிக்கு எதிரானவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அந்த ஆட்சியும் நீண்ட காலத்திற்கு தப்பி பிழைத்தது.
கடந்த காலங்களில் அணு ஆயுதங்களை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அரசியல் பொருளாதார செலவும் மாற்றப்பட்டன. எனவே அதை போலவே எதிர்காலத்திலும் ஒரு குழுவாக அணு குழு புதிய உறுப்பினர்களுடன் உருவாகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக