Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

சத்துமிக்க சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை வீட்ல எப்படி செய்றது?

முக்கிய பொருட்கள்

  • 1 வாழை பூ
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • தேவையான அளவு உப்பு

பிரதான உணவு

  • 1 கப் இரவு ஊறவைத்த கடலை பருப்பு
  • 3 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
  • 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
  • 4  நறுக்கிய பச்சை மிளகாய்
  • தேவையான அளவு சிவப்பு மிளகாய்
  • தேவையான அளவு கறிவேப்பிலை
  • 8 பூண்டு பல்
  • 1 1/2 தேக்கரண்டி சீரக விதைகள்.

Step 1:

ஊறவைத்த கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டு மூன்றையும் மிக்ஸியில் வைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


Step 2:

வாழைப் பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பூவில் இருக்கும் மெல்லிய நரம்புகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.


Step 3:

அரைத்த கடலைப்பருப்பு விழுதுடன் நறுக்கிய வாழைப்பூக்களையும் சேர்த்து நன்றாக ஒன்றுடன் ஒன்று சேறும்படி பிசைந்து கொள்ளுங்கள்.


Step 4:

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இப்பொழுது கொஞ்சம் மாவை எடுத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள்.


Step 5:

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்துப் பொன்னிறமாக வேகவைத்து எடுங்கள். மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.


Step 6:

மாலை நேர சிற்றுண்டி என்றழைக்கப்படும் இந்த வடையை டீ குடிக்கும் போது சட்னியை தொட்டுக் கொண்டே சாப்பிடுங்கள் மறக்க முடியாத ருசியுடன் அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். இன்னைக்கே உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக