Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ரூ. 100 கோடியுடன் காத்திருக்கும் அமேசான்: விஜய்யின் மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாகுமா, ஓடிடியில் ரிஸாகுமா என்பது தான் பெரிய கேள்விக்குறி. மாஸ்டர் படத்தை கண்டிப்பாக தியேட்டர்களில் தான் வெளியிடுவோம் என்று லோகேஷ் கனகராஜ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை பார்த்தவர்கள் அப்படி என்றால் சூரரை அடுத்து மாஸ்டரும் தியேட்டருக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடிக்கு வந்துவிடுவாரோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதை பார்த்தவர்கள் அப்படி என்றால் சூரரை அடுத்து மாஸ்டரும் தியேட்டருக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடிக்கு வந்துவிடுவாரோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என்பது போன்ற ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வலம் வந்தது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கவலை அடைந்தாார்கள். இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் ஓடிடி ரிலீஸ் பற்றி அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப மாட்டோம் என்று கூறி மனதை தேற்றிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

மாஸ்டர் படத்தை வாங்க அமேசான் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறதாம். ரூ. 100 கோடி கொடுக்க அமேசான் நிறுவனம் தயாராக இருக்கிறதாம். ரூ. 100 கோடி பெரிய தொகை என்பதால் மாஸ்டர் படத்தை அமேசானுக்கே கொடுத்துவிடலாமா என்று மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால் இந்த தகவலை சேவியர் பிரிட்டோ உறுதி செய்யவில்லை. அதனால் விஜய் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தியேட்டர்களை திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. இந்நிலையில் தியேட்டர்களை திறந்தாலும் கூட கூட்டம் வரும் என்பது சந்தேகம் தான். அதனால் தான் பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் படங்களை ஓடிடியில் வெளியிட முன் வருகிறார்கள்.

மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு அது நடக்காமல் போனது. இதையடுத்து தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை அப்படியே தான் இருப்பதால் அதுவும் சாத்தியம் இல்லை. எனவே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக