Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பாஸ் புக்கைப் பயன்படுத்தியும் ஆதாரில் முகவரியை மாற்றலாம்! சீல் & கையெழுத்து அவசியம்!


ஆதார். கிட்டத்தட்ட இன்று அரசின் எல்லா சேவைகளையும் பெற, ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது.
Unique Identification Authority of India (UIDAI) என்கிற அமைப்பு, ஆன்லைனிலேயே ஆதார் தொடர்பான விவரங்களை திருத்திக் கொள்ள, மாற்றம் செய்ய, புதிய விவரங்களை அப்டேட் செய்ய அனுமதிக்கிறது.
ஆனால் அதற்கு சரியான ஆதாரங்களை, ஆன்லைனிலேயே சமர்பிக்க வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி திருத்தத்துக்கு, என்ன மாதிரியான டாக்குமெண்ட்களை சமர்பித்தால் ஏற்றுக் கொள்ளும்? வங்கி பாஸ் புத்தகத்தை ஏற்றுக் கொள்வார்களா? வாருங்கள் பார்ப்போம்.

முகவரி சான்று 44 டாக்குமெண்ட்கள்

UIDAI அமைப்பு, மொத்தம் 44 டாக்குமெண்ட்களை முகவரி சான்றாக ஏற்றுக் கொள்கிறார்களாம். பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தங்கள் (Rental Agreement), ஓட்டுநர் உரிமம், டெலிபோன் பில், மின்சார வாரிய பில், தண்ணீர் பில் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை... என மொத்தம் 44 டாக்குமெண்ட்களை முகவரி சான்றாக ஏற்றுக் கொள்கிறதாம்.

வங்கி பாஸ் புத்தகம்

வங்கி பாஸ் புத்தகத்தை (Bank Passbook), ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்துக்கான சான்றாகக் கொடுக்கலாம். ஆனால், பாஸ் புத்தகத்தில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர் போட்டோ மீது, சம்பந்தப்பட்ட வங்கியின் சீல் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியின் கையெழுத்து இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தி இருக்கிறது அதிகாரபூர்வ ஆதார் ட்விட்டர் பக்கம்.

இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளப்படாது

அப்படி ஒருவேளை வாடிக்கையாளர் போட்டோ மீது, சம்பந்தப்பட்ட வங்கியின் சீல் & வங்கி அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றால், பாஸ் புத்தகத்தை ஒரு சரியான டாக்குமெண்டாக எடுத்துக் கொள்ளாது எனவும் சொல்லி இருக்கிறது அதிகாரபூர்வ ஆதார் ட்விட்டர் கணக்கு. இந்த ட்விட்டை மேலே படத்தில் காணலாம்.

எப்படி மாற்றம் செய்வது

UIDAI வலைதளத்தில், முகவரியை ஆன்லைனிலேயே மாற்றுவதற்கான ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி, உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே, ஆதாரில் முகவரியை மாற்றி விட முடியும். இந்த ஆன்லைன் சேவையை, ஆதாரில் தங்கள் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்தவர்கள் மட்டுமே பெற முடியும். எனவே ஆதார் உடன், தங்கள் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள், முதலில் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக