Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

அமேசானின் செம மூவ்.. 7,000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்..!


பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட இந்த நெருக்கடியான நிலையிலும் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஆனால் இந்த நெருக்கடியான நேரத்திலும் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அதுவும் நிரந்தர வேலை வாய்ப்பு என்றால் சும்மாவா? ஜாம்பவான் நிறுவனம் கூட, பணி நீக்கம் செய்து வரும் நிலையில், அமேசான் பல ஆயிரம் பேருக்கு வாய்பளித்துள்ளது, உண்மையில் மிக நல்ல விஷயமே.
இது பிரிட்டனின் வேலை வாய்ப்பு சந்தையில் ஒரு சிறிய உற்சாகத்தினை கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் நடப்பு நிதியாண்டில் கொரோனா வைரஸின் மத்தியில் பல ஆயிரம் நிறுவனங்கள், பல லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில் அமேசானின் இந்த அதிரடியான அறிவிப்பு வந்துள்ளது.

வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம்

இது நடப்பு ஆண்டில் புதிய வேலை வாய்ப்பினை 10,000 ஆக உயர்த்தியுள்ளது அமேசான். பிரிட்டன் 2009க்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியினை சந்தித்தது. அரசாங்கம் தனது மிகப்பெரிய வேலை பாதுகாப்புத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த பணியாளர்கள்

இது லாக்டவுன் காலத்தில் அதிகரித்த ஆன்லைன் சில்லறை மற்றும் தளவாடங்களில் இருந்து ஒரு பிரகாசமான இடம் வந்துள்ளது. சமீபத்திய ஆட்சேர்ப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் மொத்த இங்கிலாந்து பணியாளர்களை 40,000 பேருக்கும் மேல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

நிரந்தர 7 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு

அமெரிக்காவின் இணைய நிறுவனமான அமேசான் 7,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக தெரிவித்துள்ளது. இது கிடங்கு தொழிலாளர்கள், பொறியாளர்கள், மனிதவள மற்றும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட துறைகளில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறையில் வேலை

2009 பிறகு பிரிட்டன் மிகப்பெரிய வேலையிழப்பினை சந்தித்துள்ள நிலையில், அமேசானின் இந்த அதிரடியான வாய்ப்பு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் இரண்டு புதிய விநியோக மையங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தளங்களில் இந்த வேலைகள் இருக்கும்.

பருவகால வேலை வாய்ப்பு

அமேசான் பண்டிகை காலத்திற்காக பிரிட்டன் முழுவதும் 20,000 மேற்பட்ட பருவகால பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் பிரிட்டீஷ் தொழில்துறை கூட்டமைப்பு, நிதி நெருக்கடியின் ஆழத்திலிருந்து பிரிட்டீஷ் சில்லறை விற்பனையாளர்கள் அதிக வேலைகளை குறைத்து விட்டதாகவும், இழப்புகளின் வேகம் அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக