-----------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!!
-----------------------------------------------------
சேகர் : எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது டாக்டர்...
டாக்டர் : எவ்வளவு நாளா இப்படி இருக்கு?
சேகர் : எவ்வளவு நாளா இருந்தா உனக்கென்ன?
டாக்டர் : 😳😳
-----------------------------------------------------
தொண்டன் : நீங்க சொன்ன மாதிரியே AC-ஐ போட்டு தள்ளிட்டோம் தலைவா...
தலைவர் : நான் எப்படா சொன்னேன்?
தொண்டன் : டென்ஷன்னா இருக்கு... AC-ய போடுங்கடான்னு நீங்க தானே சொன்னீங்க...
தலைவர் : 😩😩
-----------------------------------------------------
தீபக் : நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கக்கூடாது?...
வடிவேலு : சொல்லுங்க அண்ணே... நான் கோவிச்சுக்க மாட்டேன்...
தீபக் : ஒன்னு...
வடிவேலு : சொல்லுங்க அண்ணே...
தீபக் : அதான் சொன்னேனே... ஒன்னு...
வடிவேலு : 😡😡
-----------------------------------------------------
இன்றைய கடி...!!
-----------------------------------------------------
இந்த உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை... ஆனா
.
.
.
.
.
அவ்வளவு பெரிய கரண்டிக்கு எங்க போறதுன்னு தெரியல...😝😝
எல்லா வலிகளையும் விட மிக அதிக வலியை தருவது எது தெரியுமா?
.
.
.
.
.
முறுக்கு தின்னும் போது நறுக்குன்னு நாக்க கடிச்சுக்கிட்டா வருமே... அதான்...!!😂😂
-----------------------------------------------------
படித்ததில் பிடித்த வரிகள்..!!
-----------------------------------------------------
அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான்,
முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான்...
மரியாதைக்கு விலை இல்லை,
ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது...
பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன்,
எதையும் முடிக்க மாட்டான்...
உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு,
தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர்தான் சுயநலம்...
-----------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
விளக்கம் :
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக