Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!



 கன்னி இராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் சந்திரன் நட்பு என்னும் நிலையில் நின்று செய்ய இயலும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி நாம் காண்போம்.

 அனைத்து விதமான செயல்பாடுகளையும் அறிந்தவர்கள்.

 சிறு விஷயங்களையும் நுட்பமாக காணக்கூடியவர்கள்.

 அனைவரையும் கவரக்கூடிய வசீகரமான புன்சிரிப்புகளையும், எழில்மிகு தோற்றத்தையும் கொண்டவர்கள்.

 எச்செயலையும் கலை ரசனையுடன் விரும்பி செய்யக்கூடியவர்கள்.

 எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் சிரித்து பேசி சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

 எந்த விதமான கேள்விகளுக்கும் சாதுர்யமாக விடை அளிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

 வாழ்க்கையை ரசித்து எப்படி வேண்டுமானாலும் வாழக்கூடியவர்கள்.

 இரகசியங்கள் பலவற்றை கொண்டவர்கள்.

 அனைவரிடமும் நகைச்சுவையாகவும், எளிதில் பேசி கவரக்கூடியவராகவும் விளங்கக்கூடியவர்கள்.

 ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்கக்கூடிய வல்லமை உடையவர்கள்.

 எதிலும் ஆதாயத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

 இவரின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது என்பது சற்று கடினம்.

வாகன வசதிகளும், பயணங்களின் மீது விருப்பமும் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக