Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இது சிரிப்பதற்கான நேரம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ------------------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------------------------------------

கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு...
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நாளைக்கும் நீங்கதான் சமைக்கணும்...
கணவன் : 😔😔
------------------------------------------------------------------------

நோயாளி : ரொம்ப நாளா இங்கே நான் சிகிச்சைக்கு வந்துக்கிட்டு இருக்கேன் டாக்டர்... இன்னும் சரியாகவே இல்ல...
மருத்துவர் : எவ்வளவு நாளா?
நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துல இருந்து.
மருத்துவர் : 😬😬
------------------------------------------------------------------------

ராமு : டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?
குமார் : ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆப்ரேஷனாம்..
ராமு : 😂😂

------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

------------------------------------------------------------------------

அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்...
எல்லோருக்கும் பிடிக்கும்படி எவராலும் வாழ முடியாது...
கடவுளாலும் கூட...

தோல்விகளில் கற்றுக்கொள்...
கேள்விகளில் பெற்றுக்கொள்...
தவறுகளை ஏற்றுக்கொள்...
இதுவே வெற்றியின் ஆரம்பம்...
அதை நீ தெரிந்துகொள்...

வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது...
கற்றுக்கொள்வதற்கு...

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழ பழகிவிட்டால்...
மகிழ்ச்சியை தேடி நாம் செல்ல வேண்டாம்...
மகிழ்ச்சியே நம்மை தேடி வரும்...!!

------------------------------------------------------------------------

விடுகதைகள்...!!
------------------------------------------------------------------------

1. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் பவனி வருவான். அவன் யார்?

விடை : காற்று.

2. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம். அது என்ன?

விடை : முட்டை.

3. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு. அது என்ன?

விடை : நிலா.
உங்களால் இதை சொல்ல முடியுமா?
1. பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார வைத்தியரிடம் போய் வைத்தியம் பார்ப்பார்?...😂😂

2. காக்கா காக்கா-ன்னு கத்துறதுனால காக்கா-ன்னு பேரு வந்துச்சா?...
இல்ல... காக்கா-ன்னு பேரு வந்ததுனால காக்கா காக்கா-ன்னு கத்துதா?😬😬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக