Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒட்டுமொத்த உலகிற்கும் ஹேப்பி நியூஸ்... மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

Russia releases first batch of Covid-19 vaccine Sputnik V into public ||  ரஷ்யாவில் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் -V ..!

ரஷியா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்- வி கொரோனா தடுப்பூசி அந்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று ரஷிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு தாங்கள் தான் என்று, உலக நாடுகளுக்கு ரஷியா அண்மையில் அறிவித்தது. காமாலியா தொற்றுநோய் தடுப்பு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து, ரஷியா தயாரித்துள்ள தடுப்பு மருந்துக்கு 'ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து முறையான பரிசோதனைகளை முடிக்கவில்லை என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதாவது இந்த மருந்து ஹூயுமன் ட்ரையலை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்றும், எனவே இந்த தடுப்பூசியை ஏற்றுகொள்ள இயலாது எனவும் உலக நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

ஆனால், ஸ்புட்னிக்-வி மருந்தின் மீதான நம்பகத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில், தனது மகளுக்கே இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

மேலும், தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளையும் வென்றிகரமாக கடந்துவிட்டதாகவும், இதுதொடர்பான உலக நாடுகளின் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டதாகவும் ரஷியா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் இந்த தடுப்பு மருந்து தங்கள் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும்' என்று ரஷியாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரிசோதனை: இதனிடையே, இந்தியா, பிரேசில், பிலிஃபைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் ஸ்புட்னிக் -வி தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை (ஹூயுமன் ட்ரையல்) இந்த மாதம் தொடங்கவுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக