Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

நீ ட்ரீட் குடுக்க என் ஃபோன்தான் கிடைச்சுதா! – நண்பனை கழுத்தை நெறித்து கொன்ற டிரைவர்!

drinking
தனது செல்போனை விற்று மது விருந்து நடத்தியதற்காக நண்பனையே கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தி.நகர் எம்.ஆர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனசேகரன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்வதால் அவரது மனைவி அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் குழந்தைகளோடு வசித்து வருகிறார்.

மனைவி இல்லாததால் அடிக்கடி மது அருந்தி வந்த தனசேகரன் நேற்று முன் தினம் தனது நண்பர்களான விக்டர் மற்றும் ரமேஷுடன் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளார். விடிந்ததும் விக்டர் எழுந்து பார்த்தபோது தனசேகரன் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு நண்பரான ரமேஷை காணவில்லை. இதுகுறித்து விக்டர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் தனசேகரன் உடலை பிரேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தனசேகரன் கழுத்து இறுக்கப்பட்டு இறந்த நிலையில் கயிறு, துணி போன்றவை அருகில் காணப்படவில்லை. இந்நிலையில் மாயமான ரமேஷை தேடி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் தனசேகரன் யாருக்கோ பேச வேண்டுமென ரமேஷின் போனை வாங்கி விட்டு திரும்ப தரவில்லையென்றும், மது அருந்தியபோது இதுகுறித்து கேட்டதற்கு போனை விற்றுதான் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் என தனசேகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மதுபோதையில் தனசேகரை கழுத்தை நெறித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ரமேஷை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக