கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது 3.23 கோடி பேர்களுக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்பட பல நாடுகள் ஈடுபட்டு இருந்தன
சமீபத்தில் ரஷ்யா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக அறிவித்ததோடு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பரிசோதனை செய்து பார்த்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த தடுப்பூசியை உலக சுகாதார மையம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ரஷ்யாவில் உள்ள மருந்து கடைகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைப்பதாகவும் இதனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
முதல் கட்டமாக தன்னார்வலர்கள் முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதன் பின்னரே பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக