விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன், டிரோன், 1 கிலோ தங்கம் என பல பொருட்களை கடத்திய நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் தங்கத்தை எங்கே வைத்து கடத்தினர் தெரியுமா?
கொரோனா தொற்று நோய் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்குப் பின்னர் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். அப்படி சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய 4 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திய பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று நோய் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்குத் துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானம் தரையிறங்கியது. சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த பயணியின் பெட்டிக்குள் 5 டிரோன்கள், விலை உயர்ந்த 2 ஐபோன் சாத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் அவர் அதிகாரிகள் முழுவதுமாக சோதனை செய்தனர், அப்பொழுது அவரின் உள்ளாடைக்குள் சுமார் 430 கிராம் தங்க கட்டி மறைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த பயணியிடம் இருந்த அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 33 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், குவைத், கத்தார் விமானங்களில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த இருவர் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஒரு பயணியிடம் இருந்து மொத்தம் 570 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக