Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தமிழகப் பள்ளிகள் திறப்பு: வெளியான முக்கிய ரூல்ஸ் - உஷாரா இருங்க மாணவர்களே!

வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் 50 சதவீத எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படவுள்ளனர். அதன்படி,

மாணவர்களுக்கு...

* ஒரு நாளில் ஒரு குழுவினர் மட்டுமே பள்ளிக்கு வரலாம்.

* முதல் குழுவினர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம்.

* இரண்டாவது குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம்.

ஆசிரியர்களுக்கு...

* முதல் குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பள்ளிக்கு வந்து பாடங்கள் நடத்தலாம்.

* இரண்டாவது குழுவினர் புதன், வியாழன் ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம்.

* மீண்டும் முதல் குழுவினர் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும்.

* இதனைத் தொடர்ந்து வரும் அடுத்த வாரம் இரண்டாவது குழுவினர் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும். எஞ்சிய நாட்களில் முதல் குழுவினர் வரலாம். இவ்வாறு மாறி, மாறி அட்டவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சரீர இடைவெளியைப் பின்பற்றும் விதிமுறைகள்

* பள்ளிகளில் கூட்டம் கூடாதவாறு 50 சதவீத மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* போதிய இடைவெளி விட்டு ஆசிரியர்கள் - மாணவர்கள் உரையாட வேண்டும்.

* சரீர இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் தரையில் போதிய இடைவெளி விட்டு குறியீடுகள் இடப்பட வேண்டும். பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்கள் சுற்றித் திரிவதை ஊக்குவிக்கக் கூடாது.

* வகுப்பறை இருக்கைகள் 6 அடி இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை மற்றும் தூய்மைப்படுத்தும் நடைமுறைகள்

* மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் மேஜை, நாற்காலிகள், கதவுகள், ஜன்னல்கள், கற்கும் உபகரணங்களை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* கைகளைச் சுத்தப்படுத்த சோப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்திருக்க வேண்டும். சானிடைசர்களும் வைத்திருப்பது அவசியம்.

* பள்ளிக்குள் நுழையும் முன்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.

* பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டிற்கு பதிலாக தொடர்பற்ற முறையில் வருகையை பதிவு செய்யும் முறையை கையாள வேண்டும்.



நோய்த்தொற்றை தடுக்கும் வழிமுறைகள்

* அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருப்பதை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்.

* முகத்தையோ அல்லது முகத்தின் ஏதாவது ஒரு பகுதியையோ தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பள்ளியின் உபகரணங்களைத் தொடுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடல் ஆரோக்கியத்தை அவ்வப்போது அனைவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக