Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

அடுத்த அறிமுகம்: மாஸ்க்கில் பாட்டுக் கேட்கலாம்,போன் பேசலாம்-தேவைப்பட்டால் துவைத்தும் பயன்படுத்தலாம்!

 ஒலியை கட்டுப்படுத்தும் அம்சம்

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்க்கில் ப்ளூடுத் ஹெட்செட்டோடு கூடிய ஸ்மார்ட் தீர்வுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று முகக்கவசம், கையுறை அணிதல். அதோடு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கானது தளர்வுகளோடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா முடிவை எதிர்நோக்கி

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும், நிலைமை எப்போது சீராக மாறும் என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. கொரோனாவுக்கு முன் பின் என காலங்கள் இரண்டாக பிரிக்கப்படும் அளவிற்கு காலங்கள் மாறியுள்ளது.

 

அனைத்து இடத்திலும் மாஸ்க் விற்பனை

கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க்குகள், கையுறைகள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க்குகள் ஆரம்பத்தில் என்95, 3 லேயர், 7 லேயர் போன்ற மாஸ்க்குகள் விற்பனை செய்து வந்தாலும். இப்போது ரோட்டோர கடைகள் என அனைத்து பகுதிகளிலும் ரூ.10-ல் தொடங்கி மாஸ்க்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

 

வையர் இயர்போன்கள் உள்ளிட்ட ஹெட்செட்கள்

மாஸ்க் அணியும் போது வையர் இயர்போன்கள் உள்ளிட்ட ஹெட்செட்கள் அணிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதோடு ஹெட்செட் மூலம் போன் பேசும்போது மாஸ்க்கை கலட்டி பேச வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

 

மாஸ்க் உடன் இணைக்கப்பட்ட மைக்ரோஃபோன்

இந்த பிரச்சனையை தீர்க்க மாஸ்க் உடன் இணைக்கப்பட்ட மைக்ரோஃபோன் என்கிற சாதனம் பாடல் கேட்கும் வசதி, குரல் அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசும் வசதியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கானது ஐபிஎக்ஸ் 5 வாட்டரண்ட் அம்சத்தோடு வருகிறது. இதை துவைத்தும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒலியை கட்டுப்படுத்தும் அம்சம்

பாடலை கேட்கும்போது அதை நிறுத்தவும், ஒலியை கட்டுப்படுத்தும் அம்சத்தோடு இந்த மாஸ்க் அறிமுகமாகிறது. இதன் வலது பக்கத்தில் 3 பட்டன்களும் உள்ளது. இந்த மாஸ்க்கில் அலெக்ஸா அணுகல், கூகுள் அசிஸ்டென்ட் போன்ற குரல் ரெக்கக்னைஸ் அம்சமும் உள்ளது.

விலை ரூ.3,600

இந்த மாஸ்க் இந்திய மதிப்பின் விலை ரூ.3,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த மாஸ்க் வைரஸ் தடுப்பு அம்சம், காற்று வடிப்பான்கள் உள்ளிட்டவைகள் இருக்கிறது. மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்ட ப்ளூடூத் அம்சம் இதில் உள்ளது.

ஸ்மார்ட் தீர்வு மாஸ்க்

குரல் தெளிவுக்காக அழைப்பிற்கு மாஸ்க் கழற்ற வேண்டிய தேவையில்லை. பிரிட்டிஷ் தொழிலதிபர், ஹைடெக் மாஸ்க்போன் குறித்து அதன் நிறுவனர் டினோ லால்வானி கூறுகையில், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தொற்றுநோய்களுக்கு மத்தியில் இது மக்களின் வசதிக்காக உதவும் அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் தீர்வு என்றும் மாஸ்க் என்95 அம்சத்தோடு உயர்தர பாதுகாப்பு உறுதி செய்கிறது என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக