Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

Google அதிரடி அறிவிப்பு! ஸ்டோரேஜ் நன்மைக்காக இனி 30 நாட்களுக்கு மேல் இந்த சேவை கிடையாது!

புதிய Google டிரைவ் Trash கொள்கை

கூகிள் நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் ஃபைல் சேமிப்பக தீர்வுகளுக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மாதிரியில் சில மாற்றங்களை கூகிள் நிறுவனம் வரும் நாட்களில் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அதன் விளைவாக இனிமேல் நீங்கள் டெலீட் செய்யும் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை Google டிரைவ் 30 நாட்களுக்கு பிறகு தானாகவே நீக்கும் என்று அறிவித்துள்ளது.

புதிய Google டிரைவ் Trash கொள்கை

கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 13, 2020 முதல், Google டிரைவ் Trash இல் உள்ள டெலீட்டட் பொருட்களுக்கான தக்கவைப்புக் கொள்கைகளை மாற்றுகிறோம் என்று கூறியுள்ளது. கூகிள் நிறுவனத்தின் புதிய கொள்கைப்படி, Google டிரைவ் டிராஷ் தொட்டியில் வைக்கப்படும் டெலீட் செய்யப்பட்ட எந்த கோப்பாக இருந்தாலும் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

இது சேமிப்பக வரம்பு திட்டத்திற்கு எதிராக உள்ளது

முன்பு கூகிள் டிரைவ் இல் டெலீட் செய்யப்பட்ட பைல்கள், ட்ராஷ் தொட்டியில் சேமித்து வைக்கப்படும். பிறகு பயனரால் நிரந்தரமாக அகற்றப்படும் வரை அந்த பைல்கள் கூகிள் டிரைவ் ட்ராஷ் தொட்டிகிள் காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வந்தது. இப்படி பயனர்கள் டெலீட் செய்யும் பைல்கள் ஆன்லைன் ஸ்டோரேஜில் ஹைடு செய்யப்பட்டிருக்கும் பொழுது, ​​அது உங்கள் சேமிப்பக வரம்பு / திட்டத்திற்கு எதிராக கணக்கிடப்படுகிறது.

எப்போதிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது?

பயனர்களுக்குக் கூடுதல் ஸ்டோரேஜ் அனுபவத்தை வழங்க இப்பொழுது சில மாற்றங்களைக் கூகிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, தற்போது உங்கள் கூகிள் டிரைவ் ட்ராஷ் இல் உள்ள பைல்கள் அனைத்தும் அடுத்த மாதத்திலிருந்து புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அக்டோபர் 13, 2020 முதல் இந்த புதிய நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

30 நாட்களுக்கு மட்டுமே இனிமேல் வேலிடிட்டி

இனி பயனர்கள் டெலீட் செய்யும் பைல்கள் நேரடியாக வழக்கம்போல டிரைவ் இன் ஸ்டோரேஜில் தக்கவைக்கப்படும். ஆனால், பைல்கள் டெலீட் செய்யப்படும் நாட்களிலிருந்து சரியாய் 30 நாட்களுக்கு பிறகு கூகிள் டிரைவ் ட்ராஷில் உள்ள கோப்புகள் 30 நாள் காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும்.

இந்த எண்ணம் இனி வேண்டாம்

இதனால் கூகிள் டிரைவ் பயனர்களுக்குக் கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த முறை டெலீட் செய்யும் பைல்களை கவனமாக தேர்ந்தெடுத்து டெலீட் செய்யுங்கள். இப்போதைக்கு டெலீட் செய்துவிட்டு மீண்டும் ரீட்ரைவ் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இனி எதையும் டெலீட் செய்யாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக