நீங்கள் டெபிட் கார்டு (Debit Card) மற்றும் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்தினால் இந்த செய்தியை படிப்பது மிகவும் முக்கியம். இதற்கான காரணம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI), டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்த புதிய விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதைக் கட்டாயம் தெரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது.
நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்
இந்த புதிய விதிகள் ஜனவரியில் வெளியிடப்பட்டது. ஆனால், covid-19 தொற்றுநோய் காரணத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைப் பொருத்து இந்த புதிய விதிகள் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது ரிசர்வ் வங்கி, இந்தப் புதிய மாற்றங்களைச் செப்டம்பர் 30ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விடுத்த உத்தரவு
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் ரிசர்வ் வங்கியால் என்ன விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வங்கிகள் இப்போது வழங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது.
இனி தனியாகப் பதிவு செய்ய வேண்டும்
இதற்கான சரியான பொருள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்றால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கவும் பிஓஎஸ் முனையில் ஷாப்பிங் செய்ய தேவைப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டாம் என்பது அர்த்தம். சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் இதற்கான விருப்பத்தைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும்
இன்னும் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும். தேவைப்படும் சேவைகளுக்காக இனிமேல் அவர்கள் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள அட்டைகளுக்கு வழங்குனர்கள் தங்கள் அடிப்படையில் முடிவு செய்யலாம்.
எந்த சேவை தேவை மற்றும் தேவையில்லை
உங்கள் அட்டையுடன் உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகள் வேண்டுமா என்பதை இனி நீங்களே தீர்மானிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் இதை எந்த நேரத்திலும் தீர்மானிக்க முடியும், மேலும் இனி எந்த சேவை தேவை, எந்த சேவை தேவையில்லை என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
24 மணி நேரமும் மாற்றி அமைக்க வசதி
வாடிக்கையாளர் தனது பரிவர்த்தனையின் வரம்பை 24 மணி நேரமும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நீங்கள் இதை எளிமையாகச் செய்வதற்கு மொபைல் பயன்பாடு, இணைய வங்கி, ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஐடிஆர் மூலம் பரிவர்த்தனை விவரங்களை நீங்கள் தீர்மானிக்கலாம். ரிசர்வ் வங்கி வழங்கும் ஏடிஎம் கார்டுகள் மற்றும் கிரெடிட் காடுகள் தொடர்பான புதிய விதி செப்டம்பர் 30, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக