ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும்
கூகிள் பே பயன்பாடு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ-இயக்கப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடான Google
Pay கடந்த மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம்
செய்யப்பட்டுள்ளது. இதில் 77% அல்லது 7.8 மில்லியன் பதிவிரக்கம் இந்தியாவிலிருந்து
பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 இடங்களில் எந்த நிறுவனம்
முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியலில்,
உள்நாட்டில் வளர்ந்த டிஜிட்டல் கட்டண பயன்பாடுகளான PhonePe மற்றும் Paytm ஆகியவை
முறையே 4வது மற்றும் 6வது இடங்களைப் பிடித்துள்ளது. PhonePe சுமார் 6.7 மில்லியனாக
பதிவிறக்கம் செய்யப்பட்டது, அதே நேரத்தில் Paytm 4 மில்லியனுக்கும் அதிகமான முறை
இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்று சமீபத்திய கணக்கெடுப்பு விபரங்கள்
தெரிவிக்கிறது.
கூகிள் பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம்
கூகிள் பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம்
ஆகியவை ஜூலை மாதத்தில் முறையே 3வது, 6வது மற்றும் 8வது இடத்திலிருந்துள்ளது.
தற்பொழுது வெளியான ஆகஸ்ட் மாத தகவலின்படி கூகிள் பே 2020 ஆம் ஆண்டில் முதலிடத்தைப்
பிடித்துள்ளது. இந்தியாவில் யுபிஐயின் வெற்றி கூகிள் பேவை நாட்டின் மிகவும்
பிரபலமான கட்டண பயன்பாடாக மாற்ற உதவியது.
இத்தனை மில்லியன் பயனர்களா?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவில் தொடங்கப்பட்ட கூகிளுக்குச் சொந்தமான நிறுவனம், அதன் போட்டியாளர்களான
ஃபோன்பே மற்றும் பேடிஎம் ஆகியவற்றை விட அதிக முன்னேற்றத்தைக் கண்டு தற்பொழுது
முன்னிலையில் உள்ளது.
மே மாத கணக்கு
இந்த ஆண்டு மே மாதத்தில் கூகிள் பே 75
மில்லியன் பரிவர்த்தனை பயனர்களையும், அதே நேரத்தில் ஃபோன்பே மற்றும் பேடிஎம்
முறையே 60 மில்லியன் மற்றும் 30 மில்லியன் பயனர்களைப் பதிவு செய்தது
90% சந்தைப் பங்கு
யுபிஐ சுற்றுச்சூழல் அமைப்பில்,
மூன்று நிறுவனங்களும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் 90% சந்தைப் பங்கைக்
கட்டுப்படுத்துகின்றன, NPCI வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்
மாதத்தில் யுபிஐ 1.61 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இதன் குறிப்பிட்ட
மதிப்பு ரூ .2.98 டிரில்லியனை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராமல் பட்டியலுக்குள் வந்த
யோனோ
இத்துடன், ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியாவின் யோனோ பயன்பாடு 3.4 மில்லியன் பதிவிறக்கங்களை மேற்கொண்டு, பட்டியலில்
முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
காரணம் இது தானா?
மார்ச் மாதத்தில் நாடு தழுவிய
பூட்டுதல் அறிவிக்கப்பட்ட பின்னர், நுகர்வோர் பாதுகாப்பாக இருக்க டிஜிட்டல் கட்டண
முறைகளுக்கு மாறியுள்ளனர். இதன் காரணமாகக் கூகிள் பே, போன்பே மாறும் பேடியம் போன்ற
பிற பிளேயர்களின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று
கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக