பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவிக்கும் போது டயபர் அரிப்பு அடிக்கடி உண்டாகிறது. டயபரை தவிர்க்கமுடியவில்லையென்றால் அரிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை அம்மாக்கள் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும். அது குறித்து அம்மாக்கள் மட்டுமல்லாமல் குழந்தை பராமரிப்பு மேற்கொள்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
முந்தைய காலம் போல் பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை உபாதை கழிக்க பருத்தி துணிகளை
பயன்படுத்தும் முறை வெகுவாக குறைந்துவிட்டது. இதையுமே சிறு சிறு கைக்குட்டையாக
கத்தரித்து வைத்து கொள்வது, குழந்தையின் இடுப்பில் சுற்றிவிடுவது என்று
குழந்தைக்கு செளகரியமாகத்தான் எல்லாவற்றையும் செய்தார்கள். இவை குழந்தையின்
சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
அதோடு இவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால் அதிக செலவும் இல்லை.
இந்த பருத்தி துணிகளை பயன்படுத்தும் போது குழந்தை இயற்கை உபாதை கழித்த உடன் அதை
மாற்றி விடுவோம். தற்போது கால மாற்றத்துக்கேற்ப இயற்கை உபாதையை உறீஞ்சும் யூஸ் அண்ட்
த்ரோ டயபர்கள் வந்துவிட்டது.
பெரும்பாலும் குழந்தைக்கு அதை தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீரை
உறிஞ்சுக்கொள்ளும் இந்த டயபர்கள் குழந்தைக்கு பயன்படுத்துவதற்கு எளிதாகவும்,
வசதியாகவும் இருந்தாலும் இதை சரியான முறையில் பயன்படுத்தும் போது அவை
பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. அதில் அதிக உபாதை தருவது டயபர்
ரேஷஷ். இது டயபர் அரிப்பு என்றழைக்கப்படுகிறது.
இதனால் குழந்தைக்கு தொடையில் ஏற்படும் சிவப்பு நிறத்தில் சருமதடிப்பு, அரிப்பை
ஏற்படுத்தி குழந்தைக்கு எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடும். இதனால் குழந்தைக்கு
எரிச்சல் தாங்கமுடியாமல் அழக்கூடும்.
டயபரை தவிர்க்க முடியவில்லை என்பவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் இந்த
உபாதையை தடுக்க முடியும். டயபர் அணிவிக்கும் போது என்னவெல்லாம் செய்யகூடாது என்ன
செய்யலாம் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
குழந்தைக்கு டயபர் அணிவிக்கும் போது எப்போதெல்லாம் மாற்ற வேண்டும் என்பதை சரும பராமரிப்பு நிபுணர்களிடல் ஆலோசனை பெற வேண்டும். குழந்தை இயற்கை உபாதையை கழிக்கும் வரை காத்திருந்து பிறகு டயபரை மாற்ற வேண்டும் என்று காத்திருக்க கூடாது. அதே பொன்று இது யூஸ் அண்ட் த்ரோ என்பதால் இன்னும் இரண்டு முறை சிறுநீர் கழிக்கட்டும் பிறகு மாற்றிகொள்ளலாம். அதற்குள் டயபரும் ஈரமாகாமல் உறிஞ்சி இருக்கும் என்று நினைக்காமல் மாற்றுவது அவசியம்.
குழந்தைக்கு டயபர் வாங்கும் போது அம்மாக்கள் இறுக்கமானதை தேர்வு செய்வார்கள். ஆனால் பெரியவர்கள் போன்று குழந்தைகளுக்கு இறுக்கமானதை தவிர்த்து தளர்வானதை தேர்வு செய்ய வேண்டும்.அதிக இறுக்கமாக இருந்தால் குழந்தையின் சருமத்தில் தடிப்பு உண்டாக வாய்ப்புண்டு.
தற்போது டயபரில் நறுமணம் கலந்த டயபர்கள் புழக்கத்தில் உள்ளது. இதை பயன்படுத்தகூடாது. மாறாக தரமான டயபர் வகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
குழந்தைக்கு டயபர் மாற்றும் போது குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் தொடைப்பகுதியை டயபரால் துடைத்து பிறகு சுத்தம் செய்வதும் உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் இதை செய்யக்கூடாது. டயபரை கழற்றி அப்புறப்படுத்திய பிறகு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி அதன் பிறகு மெல்லிய பருத்தி துணியை வெதுவெதுப்பான நீரில் துடைத்து குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் தொடைப்பகுதியில் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
உடனே டயபரை அணிவிக்காமல் சிறிது நேரம் உலரவிட்டு வேறு டயபரை மாற்ற வேண்டும். இல்லையெனில் ஈஸ்ட், பாக்டீரியா தொற்றுகள் தொடைகளை பதம் பார்த்துவிடும்.
குழந்தைக்கு டயபரை போட்டு வைத்திருக்கிறோம் என்று கவனிக்காமல் இருக்க கூடாது. அடிக்கடி குழந்தையின் டயபரை செக் செய்து மாற்றிவிடுவது நல்லது. தற்போது மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்தக்கூடிய டயபர்கள் இருந்தாலும் அதையும் அவ்வபோது மாற்றிவிட வேண்டும். அதே போன்று அவை பயன்படுத்தும் காலத்துக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சிறுநீர் கழித்திருந்தாலும் அவை தொடை இடுக்குகள் வரை ஈரம் செல்வதால் அங்கு கிருமித்தொற்று உண்டாவது எளிதாக இருக்கும்.
குழந்தைக்கு எதற்காகவாது மருத்துவரின் அறிவுரையில் மருந்து கொடுக்கும் போது, தாய்ப்பால் கொடுக்கும் தாய் ஆண்டி பயாடிக் எடுத்துகொள்ளும் போது இந்த அரிப்பு பிரச்சனை உண்டாக கூடும்.ஆரம்ப கட்டத்தில் இந்த அரிப்புகள் தொற்றுகளுக்கும் திவிர எரிச்சல் உபாதைக்கும் வழி வகுக்கும். தொடர்ந்துடயபர் அணிவிக்கும் போது அது மோசமான உபாதையை குழந்தைக்கு உண்டாக்கிவிடும்.
டயபர் தவிர்க்க வேண்டிய காலம்
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை இருக்கும் போது இயன்றவரை டயபரை தவிர்ப்பதே நல்லது. இந்த நாட்களில் கண்டிப்பாக டயபர் அரிப்பு உண்டாக கூடும். வெளியில் செல்ல நேராத சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக டயபரை தவிர்ப்பதுதான்சிறந்தது.
பகல் நேரங்களில் வீட்டில் இருக்கும் சமயங்களிலும் டயபர் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக குழந்தையின் இடுப்பில் மெல்லிய பருத்தி துணியால் செய்த லங்கோட்டாக்களை செய்துகொள்ளலாம். இரவு நேரங்களிலும் நீங்கள் தூங்குவதற்கு முன்பே குழந்தைக்கு டயபர் மாட்டிவிடாமல் எல்லா வேலைகளும் முடிந்து நீங்கள் படுக்கைக்கு செல்லும் போது மாட்டிவிடலாம். அதே போன்று காலையில் எழுந்த உடன் கைகளை சுத்தம் செய்த கையோடு டயபரை கழற்றி விடுங்கள். பிறகும் உடனடியாக டயபரை பயன்படூத்த வேண்டாம். சிறிது நேரம் குழந்தைக்கு அந்த இடத்தில் காற்று பரவட்டும்.
குழந்தைக்கு காய்ச்சல் நேரத்தில் நீங்கள் குழந்தையின் அருகில் இருக்கும் காலத்தில் டயபரை தவிர்ப்பது நல்லது. இத்தனை முறை டயபரை மாற்றினால் வீட்டில் பட்ஜெட் இடிக்கும் என்றால் மென்மையான பருத்தி துணிக்கு மாறி விடுங்கள். இவை சருமத்துக்கு நன்மையே செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக