
எல்ஜியின் விங் (Wing) ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது, இப்போது இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டது. LG Wing smartphoneஇன் சிறப்பு அம்சம் அதன் டி-வடிவ தனித்துவமான வடிவமைப்பு. இது இரட்டை திரை பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் அதன் திரையை சுழற்றலாம். இந்த ஃபோன் தற்போது தென் கொரியாவில் ஒரு virtual நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்மைக் காலங்களில், பல நிறுவனங்கள் இரட்டை திரை ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன, ஆனால் எல்ஜி விங்கின் வடிவமைப்பு இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் ஸ்கை ப்ளூ (Aurora Gray and Sky Blue color) நிறங்களில் கிடைக்கிறது. இருப்பினும், இந்த தொலைபேசி எப்போது சர்வதேச சந்தையில் வெளியகும் என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.
விவரக்குறிப்பு
தென் கொரிய நிறுவனமான LGயின் இந்த தொலைபேசி 6.8 இன்ச் கொண்டது. Curved Full HD
Plus P-OLED இதன் திரை, இதன் aspect ratio 20.5: 9 ஆகும். இந்தத் திரையை
டி-ஷேப்பில் சுழற்றலாம். இதன் மூலம், இது 3.9 இன்ச் Full HD Plus G-OLED திரை
கொண்டுள்ளது.
இது இரண்டாம் நிலைத் திரையின் aspect ratio 1.15: 1 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 765G 5G செயலி உள்ளது. இது 8GB RAM மற்றும் 128/256 GB internal storage வேரியண்ட்டுடன் வருகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டின் உதவியுடன் உள் சேமிப்பை 2TB ஆக அதிகரிக்கலாம்.
எல்ஜி விங் மொபைலின் பின்புற பேனலில் மூன்று கேமராக்கள் உள்ளது. 64MP பிரைமரி சென்சார், 13 MP அல்ட்ரா வைட் மற்றும் 12MP மூன்றாம் அல்ட்ரா வைட் ஷூட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் selfieக்கு 32 MP pop-up கேமரா உள்ளது.
Android 10 OS இல் இயங்கும் LG Wing smartphone, இரண்டாம் திரையில் Gimbal mode கொண்டுள்ளது. 4000 mAh பேட்டரி கொண்ட LG Wing smartphone, Qualcomm Quick Charge 4.0 தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 260 கிராம் எடை கொண்ட LG Wing smartphone, IP rating வரம்பிற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக