Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்..."எவனென்று நினைத்தாய்"....

 :லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்..."எவனென்று நினைத்தாய்"....


லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan 232) அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" (Evanendru Ninaithai) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

விஜய்யின் ‘மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த பட குறித்து இன்று மாலை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் 232 படம் இதுவாகும். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

 Aandavarukku Nandri #KamalHaasan232 #எவனென்றுநினைத்தாய்@ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @RKFI pic.twitter.com/ealPsOWxFS

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 16, 2020

 அவரது புதிய படம் அவரது சினிமா முன்னோடி ‘உலக நாயகன்' கமல் ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டிருக்கும் என்பது நீண்ட காலமாக ஒரு சலசலப்பு  இருந்து வந்த நிலையில் தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதியானது. இந்த புதிய படம் த்ரில்லர் ஜானர் இல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Master) வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். கொரோனா பாதிப்பால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகாமல் இருந்து வருகிறது. மாஸ்டர் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக