முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வீ தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட ஐந்து திட்டங்களில் ரூ.999 மதிப்புள்ள சலுகையை இலவசமாக அறிவித்துள்ளது.
வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார்
ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை செயல்அதிகாரி ரவீந்தர் தக்கர் மெய்நிகர்தளம் மூலம் வெளியிட்டார். அதில் வீ.,vi என்ற புதிய பிராண்ட்டை அறிவித்தார். இது we என்ற உச்சரிப்போடு அழைக்கப்படுகிறது.
தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர்
வோடபோன் ஐடியாவின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் இதுகுறித்து கூறுகையில், இரண்டு பிராண்டுகளின் இணைப்பு உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பின் உச்சம் எனவும் எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டுச் செல்லும் ஒரு பிராண்ட் இது எனவும் குறிப்பிட்டார். இரண்டு பிராண்டுகள் ஒருங்கிணைப்பிற்கு பிறகு புதிய தொடக்கத்திற்கான நேரமாக இது இருக்கும் எனவும் டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை வழங்குவதில் வீ கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Vi வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள்
இந்த புதிய தோற்றம் மற்றும் புதிய உணர்வைக் கொண்ட Vi தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை குறித்து பார்க்கலாம்.
ஜீ5 ப்ரீமியம் சந்தா
வீ நிறுவனம் ஜீ5 ப்ரீமியம் சந்தாவை வழங்கும்படியான ஐந்து திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 ஆகிய திட்டங்களில் இந்த சந்தா சலுகையை வழங்குகிறது.
ரூ.355 விலையில் ரீசார்ஜ் திட்டம்
ரூ.355 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் ரூ.999 மதிப்புள்ள ஓராண்டு ஜீ5 ப்ரீமியம் சந்தாவை நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
ரூ.595 விலையில் திட்டம்
ரூ.595 திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும், இதில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களோடு ஒரு வருடத்திற்கான ஜீ5 ப்ரீமியம் சந்தா சலுகையை வழங்குகிறது.
ரூ.795 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.795 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களோடு ஒரு வருடத்திற்கான ஜீ5 ப்ரீமியம் சந்தா சலுகையை வழங்குகிறது.
ரூ.2595 விலையில் வருடாந்திர திட்டம்
ரூ.2595 திட்டம் வருடாந்திர திட்டமாகும். இது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களோடு ஒரு வருடத்திற்கான ஜீ5 ப்ரீமியம் சந்தா சலுகையை வழங்குகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக