வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களுக்கு
சிறப்பு சலுகை இருக்கிறது, கிரெடிட் கார்டு மாற்றித் தருகிறோம் என்று கூறி வங்கி
சார்ந்த தகவல்களை வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் அதிகமாக நடக்கிறது.
குறிப்பாக இதுபோன்ற செய்திகள் நாம்
செய்தித்தாள்களில் அதிகமாக பாக்கிறோம். இதேபோன்று சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர்
கிரெடிட் கார்டு மூலம் 10லட்சத்து 30ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும்
பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
தற்போது சென்னை கோயம்பேட்டை சேர்ந்த கார்திகேயன்
என்னும் இளைஞர் ஒருவர் தான் எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக
கூறி மோசடியில் ஈடுபட்டு கைது
செய்யப்பட்டுள்ளார்.
சென்னை
முகலிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரை செல்போனில் தொடர்புகொண்ட கார்திகேயன்,
தான் எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரின் கிரெடிட் கார்டை மாற்றித்
தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்பு காரத்திகேயனின் பேச்சை நம்பிய இருதயராஜ்,அவரின் கிரெடிட் கார்டு நம்பர் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் பெற்று, அவரின் செல்போன் நம்பருக்கு வந்த 2ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். அதன்பின்பு இருதயராஜ் வங்கிக் கணக்கில் இருந்து 10லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கார்திகேயன் மோசடி செய்து விட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்த இளைஞரான கார்திகேயன் வளசரவாக்கம் தனியார் வங்கி கிளைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து உடனே அந்த பகுதியில் இருக்கும் 25 சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் இருசக்கர வாகன எண்ணை வைத்து கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்துள்ளனர்.
அதேபோல் போலி ஆன்லைன் வங்கி சேவைகள், போலி இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் போலி வங்கி அழைப்பு ஆகிவற்றில் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை விரையமாக மோசடி கும்பலிடம் இழந்துவருகின்றனர், மேலும் இதுபோன்று வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி ஒடிபி எண் கேட்டால் கண்டிப்பாக நீங்கள் அதை பகிரக்கூடாது.
மேலும் இணையதளத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் சரியான தகவல் அல்ல, அதிலும் குறிப்பாக வங்கி தொடர்பான செல்போன் எண்கள், வங்கி தொடர்பான சேவை மைய எண்கள் ஆகியவை பெரும்பாலும் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவையே. போலி எண்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த வலையில் வீணாய் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை இழக்கிறார்கள். வங்கியின் அங்கீகரிக்கப் பட்ட ஆப்ஸ் மூலம் மட்டும் உங்கள் வங்கி சேவையைப் பயன்படுத்துங்கள், இல்லை என்றால் சிக்கல் தான்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக