விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பிறந்த
குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் சிறப்பு பரிசு கிடைத்துள்ளது.
கடந்த புதன் அன்று டெல்லியில் இருந்து
பெங்களூருவிற்கு இண்டிகோ விமானம் 6E 122 புறப்பட்டுச் சென்றது. அதில்
பயணித்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமான ஊழியர்கள் உதவியுடன் நடுவானில் விமானத்திலேயே பிரசவம்
நடந்தது. அதில் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சூழலில்
குழந்தை பிறப்பதற்கு உதவி செய்த விமான ஊழியர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து
வருகின்றனர்.
பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய உடன் தாய்
மற்றும் குழந்தைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இண்டிகோ
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களின் விமானத்தில் குறைபிரசவத்தில் ஆண்
குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த பிரசவத்தை ஆரோக்கியமான முறையில் நடக்க எங்களது ஊழியர்கள் உதவி செய்துள்ளனர்.
அந்த குழந்தைக்கு எங்கள் இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பறக்கும்
சலுகையை அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விமானத்துறை தரப்பு கூறுகையில், கடந்த
புதன் அன்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விமானம் கடந்த புதன் அன்று இரவு
7.30 மணிக்கு பெங்களூருவில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக
2017ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த
குழந்தைக்கு, அந்நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை
வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக