
ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன், ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதித்யா பிர்லா பேஷன் வர்த்தகத்தில், பிளிப்கார்ட் நிறுவனம் 7.8% பங்குகளை, 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு பங்கினை 205 ரூபாயாக்கு வாங்கலாம் என்றும் தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு பிராண்டுகளின் விற்பனை மற்றும் விநியோகம் அடங்கும்.
ஆதித்யா பிர்லா பேஷன் இது குறித்து கூறுகையில், இந்த கூட்டு ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 100 பில்லியன் டாலர்களைத் தொடும். இது ஆடைத் துறையின் எதிர்காலத்தில் நமது வலுவான நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது.
அதோடு ஆதித்யா பிர்லா பேஷன் இந்த பணத்தினை அதன் இருப்பு நிலையை வலுப்படுத்த பயன்படும். அதன் வளர்ச்சி பாதையை துரிதப்படுத்த பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார். தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் ஆடைகள், உள்ளாடைகள், விளையாட்டு உடைகள், சாதாரண உடைகள் மற்றும் பல ஆடைகளின் இருப்பை அதிகரிக்கும் என்றும் ஆதித்யா பிர்லா பேஷன் தெரிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனை முழுமையாக முடிந்ததும் ஆதித்யா பிர்லா பேஷன், ஏப்ரல் 1, 2020 முதல் 2,500 கோடி ரூபாய் மூலதன திரட்டலை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும். இது கொரோனா தொடங்கியதில் இருந்து சவாலான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்த வளர்ச்சி கண்டுள்ளது.
இது ஆதித்யா பிர்லா பேஷனுக்கு வளர்ச்சியினை கொடுக்கும் என்றாலும், மறுபுறம் பிளிப்கார்டுக்கும் அதன் வளர்ச்சியினை ஊக்குவிக்க வாய்ப்பாய் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால், ஆதித்யா பிர்லா பேஷனில் விளம்பரதாரர் மற்றும் விளம்பரதாரர் குழு நிறுவனங்கள் சுமார் 55.13 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் இந்த கொரோனா நெருக்கடிக்கும் மத்தியில் இதுபோன்ற முதலீடுகள் அதிகரித்து வருவதை பார்க்கப்படுகிறது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 13.62% அதிகரித்து 174 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக