சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2, 000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான
வரித் துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில்
கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரது சொத்துக்களை தொடர்ந்து முடக்கும் நடவடிக்கையில்
வருமான வரித் துறை தீவிரம காட்டி வருகிறது.
அதன்படி தற்போது சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை வருமான வரித்துறை
அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர். தற்போது முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு
2,000 கோடி ரூபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரி துறையினர் தெரிவித்துள்ளனர்.
சசிகலாவுக்காக போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு எதிராக கட்டப்பட்டு வரும் சுமார்
24,000 சதுர அடி கொண்ட பங்களாவும், அதுதவிர 64 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. சுமார்
300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கடந்த மாதம் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா
உள்ளிட்டோருக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவரவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும்
நிலையில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகள்
சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக